பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு அன்னதானம் பசி போக்கும் கல்லுாரி மாணவி

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 ஆதரவற்றோருக்கு அன்னதானம் பசி போக்கும் கல்லுாரி மாணவி

சேலம்: ஆதரவற்றோரின் பசியை போக்கி வரும் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு குவிகிறது.சேலம், அன்னதானப்பட்டி, அகரம் காலனியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 54; கார் டிரைவர். இவரது மகள் சரண்யா, 20; சேலம், ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியில், மூன்றாமாண்டு படிக்கிறார்.

இலவச உணவுஇவர், ஞாயிறுதோறும்,சீலநாயக்கன்பட்டி பைபாஸ்; அரசு மருத்துவமனை எதிரேவுள்ள பாலம்; ஜங்ஷன்; சுகவனேஸ்வரர் கோவில் அருகே என, மாநகரின் பொது இடங்களில், கவனிப்பாரின்றி உள்ள முதியோர், மனநலம் பாதித்தோரை தேடிச் சென்று, இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.காலையில் இட்லி, மதியத்தில் தக்காளி, தயிர், கீரை, எலுமிச்சை சாதங்களை, பொட்டலமாகவும், பாக்கு மட்டையில் வைத்தும் வழங்கி வருகிறார். குடிநீர் பாட்டில்களும் வழங்குகிறார்.பிறந்த நாள் கொண்டாடுவோர், தங்கள் தாய், தந்தையின் நினைவு நாளில், அன்னதானம் வழங்குவோர் கூட, மாணவியிடம் சாப்பாட்டை கொடுத்து அனுப்புகின்றனர். மாணவியின் மனிதநேயத்துக்கு, சக மாணவியரும் உதவி வருகின்றனர்.சரண்யா கூறியதாவது:என் தேவையை, பெற்றோர் செய்து கொடுக்கின்றனர். ஆனால், பெற்ற பிள்ளைகள், உறவினர்களால் கைவிடப்பட்டோர் மனமுடைந்து, வயிற்றை நிரப்ப வழியின்றி, சாலைகளில் கவனிப்பாரின்றி வாழ்கின்றனர்.உதவிஅவர்களுக்கு இருப்பிட வசதி செய்து கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு வேளை உணவாவது கொடுத்து, பசியை போக்கலாம் என்பதால், இந்த உதவியை செய்கிறேன்.

தற்போது, தந்தை வருமானம் மூலம், 22 வாரங்களாக, ஞாயிறு மட்டும் உணவு வழங்குகிறேன். படிப்பை முடித்து, வேலைக்கு சென்றதும், உணவு வழங்கும் நாட்களை அதிகரித்து, ஆதரவற்றோர் இறந்தால், அவர்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.சரண்யாவின் சேவையை பாராட்ட, அவருடன் இணைந்து உதவ, 95855 18190 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
13-பிப்-202007:34:47 IST Report Abuse
Thalaivar Rasigan சின்ன பெண்ணாக இருந்து கொண்டு இப்பவே நிறைய உயிர்களுக்கு தாயாக இருக்கிறார். பெண்ணின் அடிப்படை குணம் கருணை - எல்லா பெண்களுக்கும் ஒரு நல்லுதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-202005:47:34 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) வாழும் கருணை தெய்வம்...வாழ்த்துக்கள் சகோதரி...
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
13-பிப்-202014:30:59 IST Report Abuse
Rameshபாரதம் முழுவதும் 1750 முன் இப்படி தான் இருந்தது ...இதை பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சர்யம் அடைந்தனர் & இந்த மாதிரி இந்தியா இருப்பதற்கு அவர்களது Culture + வாழ்வியல் முறை (சனாதன தர்மம்) ...அதை அழிப்பதற்கு திட்டங்களை தீட்டினர் ...பிராமணர்களை ஆரியர்கள் என்றும் அவர்கள் இந்தியர்களை அடக்கி ஆளுகின்றனர் என்ற விஷமத்தை புத்தகம் மூலமும் & மெக்கேலேய படிப்பு முறையையும் கொண்டு வந்து உண்மையை பொய்யாக்கினார் & பொய்யாய் உண்மையாக்கினார் ...மக்கள் இன்று வரை மாக்களாய் உள்ளனர் ....2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியா வாழ்ந்தார் அவர் பிராமணன் தான் . 5000 + ஆண்டுகளுக்கு முன்னர் துரோணாச்சாரியார் வாழ்ந்தார் அவர் பிராமணன் தான். 10000+ ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் வாழ்ந்தார் அவர் பிராமணன் தான். இதிஹாசங்களை கதைகள் என்று நம்ப வைத்தார்கள் ...இந்த மாக்களை எப்படி திருத்துவது இறைவா ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X