பொது செய்தி

தமிழ்நாடு

'லண்டானா' களைச்செடி ஒழிக்க வனத்துறைக்கு ரூ.1.44 கோடி

Added : பிப் 08, 2020
Advertisement
 'லண்டானா' களைச்செடி ஒழிக்க வனத்துறைக்கு ரூ.1.44 கோடி

கோவை: 'லண்டானா' களைச்செடியை ஒழிக்கும் வனத்துறையின் புதிய திட்டத்திற்கு, மாநில அரசு, 1.44 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில், குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், 'லண்டானா' எனும் களைச்செடி அதிகமாக காணப்படுகிறது.இந்தாண்டு டிசம்பரில், மத்திய வனத்துறை நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும், 2,209 சதுர கி.மீ., லண்டானா களைச்செடி பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாக உடைய இந்த செடி, புதர் வகையை சேர்ந்தது. அதிகபட்சம், 2 மீ., உயரம் வரை வளரக் கூடியது.விரைந்து வளரும் திறனுடைய இந்த களைச்செடி, மற்ற தாவரங்களின் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்தி விடுகிறது.

வறட்சி காலங்களில், காட்டுத்தீ விரைந்து பரவுவதற்கும், இந்த செடி காரணமாக அமைகிறதுவனத்தை ஆக்கிரமிக்கும்இந்த செடியையும், பிற தாவர கழிவுகளையும் சேகரித்து, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மரத்துகள்களாக மாற்றி, விற்பனை செய்யலாம் என, மாநில திட்டக்கமிஷனுக்கு, முதன்மை தலைமை வன பாதுகாவலர் பரிந்துரை செய்திருந்தார்.இதற்கு, மாநில புதுமை படைப்புகளுக்கான நிதியத்தில் இருந்து, 1.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கலாம் என்றும், தெரிவித்திருந்தார்.

இதை ஏற்று, தமிழகஅரசு, 1.44 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கியும், அதில், 1.21 கோடி ரூபாயை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, வனத்துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் பிறப்பித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X