பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலையில் அருங்காட்சியகம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொல்லிமலையில், மலைவாழ் மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களின் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தளமாக கொல்லிமலை உள்ளது. இங்கு, ஏராளமான மூலிகை செடிகள் நிறைந்துள்ளன. இங்கு, அகத்தியர், திருமூலர், போகர் உட்பட, 18 சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.இங்கு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் கொல்லிப்பாவை என்று அழைக்கப்படும், எட்டுக்கை அம்மன் கோவிலும் அமைந்துள்ளது.பல்வேறு சிறப்புகள் உடைய கொல்லிமலைக்கு, ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

மாவட்ட வன அலுவலர் காஞ்சனா கூறுகையில், ''கொல்லிமலையில், சூழல் பூங்கா அமைய உள்ளது. இதில், மலைவாழ் மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களின் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X