பொது செய்தி

தமிழ்நாடு

1.49 கோடி மீ., துணி உற்பத்தி பணி தீவிரம்: பள்ளி திறந்ததும் சீருடை வழங்க ஏற்பாடு

Added : பிப் 08, 2020
Advertisement

ஈரோடு: பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்க, ஈரோடில், 1.49 கோடி மீ., துணிகள் உற்பத்தி செய்து, ஆடையாக தைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழக அரசு சார்பில், அரசு பள்ளி, மாணவ - மாணவியருக்கு, ஆண்டு தோறும், நான்கு, 'செட்' இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன.ஈரோடில் உள்ள கைத்தறி மற்றும் துணி நுால் துறை மூலம், தமிழ்நாடு துணி நுால் பதனிடும் ஆலையில், சீருடைக்கான துணி உற்பத்தியாகி, சாயமிடப்படுகிறது. நடப்பாண்டு, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நுால் துறை மூலம், 1.49 கோடி மீ., துணி உற்பத்தி செய்ய, 'ஆர்டர்' பெறப்பட்டது. தவிர, கைத்தறி ரகத்தில், 3.28 லட்சம் மீ., உற்பத்தியாகிறது.ஜூனில் பள்ளி திறந்ததும், மாணவர்களுக்கு, சீருடை வழங்கும் வகையில், துணி உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணி, மார்ச் இறுதிக்குள் முடித்து, அனைத்து மாவட்டங்களுக்கும், ஆடையாக அனுப்பி வைக்கப்படும்.முதல் இரண்டு செட், பள்ளி திறந்த முதல் வாரத்தில், மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும். காலாண்டு தேர்வுக்குள், அடுத்த இரண்டு செட் சீருடை வழங்கும் வகையில், தொடர்ந்து சீருடை தயாரிக்கும் பணி நடக்கும்.

இதுபற்றி, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நுால் துறை அதிகாரிகள் கூறியதாவது:நெசவாளர்களுக்கும், கூட்டுறவு துணி நுால் ஆலை, தையல் கலைஞர்களுக்கும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில், இலவச வேட்டி - சேலை மற்றும் சீருடை உற்பத்தி பணி நடக்கிறது.இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில், 44 கூட்டுறவு சங்கங்கள் மூலம், 1.49 கோடி மீ., இலவச சீருடைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இதற்காக, 1,117 விசைத்தறிகள் பயன் படுத்தப்பட உள்ளன.மேலும், 217 கைத்தறிகள் மூலம், சீருடை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான நுால்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு நுாற்பாலைகளிடம் இருந்து கொள்முதல் செய்யப் படுகிறது.தற்போது முதற்கட்டமாக, 427 டன் நுால் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கம் மூலம் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக, தேவையான அளவு நுால் கொள்முதல் செய்து வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X