பொது செய்தி

தமிழ்நாடு

சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் 'அருட்பெருஞ்ஜோதி' முழக்கத்துடன் துவக்கம்

Added : பிப் 08, 2020
Advertisement
 சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்  'அருட்பெருஞ்ஜோதி' முழக்கத்துடன் துவக்கம்

கடலுார்: வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 149வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடைபெற்றது.கடலுார் மாவட்டம், வடலுாரில், 'இறைவன் ஒளி வடிவானவன்' என்பதை எடுத்துரைக்கும் வகையில், சத்திய ஞான சபையை, வள்ளலார் நிறுவினார். வடலுாரில், நேற்று முன்தினம், தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஏழு திரைகள்தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு, ஏழு திரைகள் நீக்கி, முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அருட்பெருஞ்ஜோதி' என கோஷமிட்டு, தரிசனம் செய்தனர்.இந்நிகழ்வில் அமைச்சர் சம்பத், கலெக்டர் அன்புச்செல்வன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். அன்னதானத்தை, அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.காலை, 10:00 மணி, மதியம், 1:00, இரவு, 7:00 மற்றும் 10:00 மணிக்கு, ஜோதி தரிசனம் காண்பிக்கப் பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த, லட்சக்கணக்கானோர், ஜோதி தரிசனம் செய்தனர்.சிறப்பு பஸ்கள்தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை, 5:30 மணிக்கு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படு கிறது. நாளை, 10ம் தேதி, சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.விழாவிற்கு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில், 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X