பொது செய்தி

தமிழ்நாடு

நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்: கலக்கத்தில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்:  கலக்கத்தில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம், நெல் மூட்டை ஒன்றுக்கு, 40 ரூபாய் அதிகாரிகள் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.

தண்ணீர் பிரச்னையால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில், சில ஆண்டாக, சம்பா சாகுபடி பரப்பு குறைந்தது.இந்த ஆண்டு, கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்ததால், மேட்டூருக்கு, அதிக நீர் வரத்து கிடைத்தது. அங்கிருந்து, பாசனத்திற்கு தேவையான தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால், நாகையில், 3.18 லட்சம் ஏக்கர், திருவாரூரில், 3.66 லட்சம் ஏக்கர், தஞ்சாவூரில், 3.44 லட்சம் ஏக்கர் என, மொத்தம், 10.28 லட்சம் ஏக்கரில், நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடவு முறையில், நெல் சாகுபடி செய்யப்பட்டது. அவற்றை அறுவடை செய்யும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகிறது.அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய சென்றால், 'ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது; எடை குறைவு' என, அதிகாரிகள், பல்வேறு காரணங்களைக் கூறி, மூட்டைக்கு, 30 - 40 ரூபாய் கட்டாயமாக வசூல் செய்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:கொள்முதல் நிலையங்களில், 40 கிலோ, 700 கிராம் எடுப்பதற்கு பதிலாக, 42 கிலோ வரை, விவசாயிகளிடம் நெல்லை வாங்குகின்றனர். மேலும், மூட்டைக்கு, 30 - 40 ரூபாய் வரை, கட்டாய வசூல் செய்கின்றனர்.இது போன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும் என, பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த பயனும் இல்லை. விவசாயம் செய்யவே சிரமப்படும் நிலையில், அரசு அதிகாரிகள் இப்படி, அவர்களிடம் கொள்ளையடிப்பதை தடுக்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.காற்றில் பறந்த அமைச்சரின் உத்தரவுஅறுவடை துவங்கிய நேரத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நடத்திய, நுகர்பொருள் அலுவலர்களுக்கான கூட்டத்தில், 'விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு, பணம் வசூல் செய்யக்கூடாது. மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார்.நாகையைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:'வசூல் செய்யப்படும், 40 ரூபாயில், பெரும் பங்கு, உயர்மட்டத்திற்கு செல்கிறது. எங்கே புகார் கொடுத்தாலும், ஒன்றும் நடக்காது' என, நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. ஒரு மூட்டைக்கு, 40 ரூபாய் வசூலிப்பதால், தினமும், கோடிக்கணக்கான ரூபாய், விவசாயிகளிடம் இருந்து, கொள்ளையடிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
09-பிப்-202020:25:06 IST Report Abuse
Gnanasekaran Vedachalam உங்க பகுதியில் உள்ள கவுன்சிலர் ம்.ல்.எ. ம்.பி யாராவது சற்று தூரத்தில் நின்று கண்காணிக்க சொன்னிக்கான முறையற்ற வர்த்தக நடவடிக்கை செய்ய பயம் ஏற்பட்டுப் அமைச்சரின் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X