சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கூடுதலாக வசூலிப்பு பஸ் ஓட்டுனருக்கு அபராதம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ஒரு ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு பஸ் நடத்துனர் மற்றும் நிர்வாகத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நாமக்கல், பொன்விழா நகரைச் சேர்ந்தவர், மதுரம், 56; தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி ஆசிரியர். இவர், 2017 ஜூலை, 24ல், நாமக்கல்லில் இருந்து புதுச்சத்திரத்திற்கு, அரசு பஸ்சில் வந்துள்ளார். நடத்துனர், 9 ரூபாய் கட்டணத்திற்கு பதில், 10 ரூபாய் பயணச் சீட்டை, அவரிடம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து, சேலம் கோட்ட போக்கு வரத்து மேலாண் இயக்குனரிடம், மதுரம் புகார் அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், நடத்துனர் செந்தில்குமரன், நாமக்கல் கிளை மேலாளர், சேலம் மேலாண் இயக்குனர் ஆகியோர் மீது, மதுரம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த, நீதிபதி செங்கோட்டையன் மற்றும் உறுப்பினர்கள் செல்வி, செல்வநாதன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.'மூவரும், மதுரத்திடம் கூடுதலாக வசூலித்த, 1 ரூபாயை திருப்பித் தர வேண்டும் மற்றும் சேவை குறைபாட்டிற்கு, அபாராதமாக, 5,000 ரூபாயை, நுகர்வேர் சேமநிதிக்கு வழங்க வேண்டும். வழக்கு செலவுக்காக, 2,000 ரூபாயை, மதுரத்திற்கு வழங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X