வில்சன் கொலையில் மேலும் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வில்சன் கொலையில் மேலும் ஒருவர் கைது

Added : பிப் 08, 2020
Share

நாகர்கோவில்: எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம், 8ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், எஸ்.ஐ., வில்சன், 57, பயங்கரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், பயங்கரவாதிகள் அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் இருவருக்கும், வீடு எடுத்து கொடுத்ததுடன், கொலைக்குப்பின், அவர்கள் தப்பி செல்ல உதவி செய்ததாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம் விதுரா பகுதியைச் சேர்ந்த, செய்யது அலி என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X