மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்களின்றி ஏமாற்றம்: ஆந்திரா, தெலுங்கானா அரசு புலம்பல்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (6)
Advertisement
ஏமாற்றம், மத்தியபட்ஜெட், வளர்ச்சி திட்டங்கள் , ஆந்திரா, தெலுங்கானா, புலம்பல்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்த, 2020 - 21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் எதிர்பார்த்த நலத்திட்ட அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படாதது, இரு மாநில முதல்வர்களையும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடக்கி வாசித்து வருகிறார்.

மத்திய அரசின், 2020 - 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லி மென்ட்டில், சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில், 'நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் தொலைநோக்கு பார்வை இல்லை' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், தென் மாநிலங்களுக்கு, குறிப்பிடத்தக்க வகையிலான வளர்ச்சி திட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லாதது, ஏமாற்றம் அளிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட் அறிவிப்புகளால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள், பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளன. ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து குறித்து, இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இரு மாநிலங்களுக் கும், நலத்திட்ட உதவிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது, இரு மாநில முதல்வர்களையும், விரக்தி அடைய செய்து உள்ளது. தெலுங்கானாவில் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் முயற்சியில், பா.ஜ., தீவிரம் காட்டி வருவதை அடுத்து, பா.ஜ., வுக்கு எதிரான அரசியல் ஆயுதத்தை, அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரு மான சந்திரசேகர ராவ் கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அவர், பட்ஜெட்டில் தெலுங்கானா மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, தன் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார். மறுபுறம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக, சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், மத்திய அரசுடன் எதிர்ப்பு போக்கை கடைப்பிடிக்க அவர் விரும்பவில்லை. எனவே, பட்ஜெட் குறித்த தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், அவர் அமைதி காத்து வருகிறார்.


மத்திய நிதிகள், 'கட்'


மத்திய அரசின், 15வது நிதி கமிஷன் அறிக்கையில், மத்திய வரி வசூலில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு, 42 சதவீதத்தில் இருந்து, 41 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில், தெலுங்கானாவின் பங்கு, 2.437 சதவீதத்தில் இருந்து, 2.133 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், மத்திய வரி வசூலில், தெலுங்கானாவுக்கு கிடைக்க வேண்டிய தொகையில், 2,381 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், 2019 - 20ம் ஆண்டில், தெலுங்கானா அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய, 19 ஆயிரத்து, 718 கோடி ரூபாய் நிதி, 15 ஆயிரத்து, 987 கோடி ரூபாயாக குறைக்கப் பட்டது. 'மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி அநியாயமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது. 'இதனால், தெலுங்கானா வின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள், பெரிதும் பாதிக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் கண்டனம் தெரிவித்தார்.

தெலுங்கானாவில், கிராம குளங்களை சீரமைக்கும், 'காகாதியா திட்டம்' அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும், 'பாகீரதா திட்டம்' ஆகியவற்றை நிறைவேற்ற, 24,000 கோடி ரூபாய் நிதி வழங்க, 'நிடி ஆயோக்' பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.


மறுக்கப்பட்ட வாக்குறுதிகள்


தெலுங்கானா, தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும், பையாராம் என்ற இடத்தில், உருக்கு தொழிற்சாலை அமைக்கவும், காசிபேட்டில், ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கவும் மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதிகள் எதுவும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும், ஐதராபாத் - பெங்களூரு, ஐதராபாத் - நாக்பூர், ஐதராபாத் - வாராங்கல் இடையே, தொழில் பெருவழிச்சாலை அமைக்கும் கோரிக்கை குறித்தும், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை.

'ஆந்திர மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது' என, தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு வர வேண்டிய, 1,137 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை குறித்தும், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.


ஜெகன் அமைதி


மத்திய பட்ஜெட் அறிவிப்புகளில், தெலுங்கானாவுக்கு இணையாக, ஆந்திராவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. ஆனால், சில அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க, இது நேரமல்ல என, அவர் கருதுவதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாநில பா.ஜ., தலைவர்கள், ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வந்தாலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவர் அமைதி காத்து வருவது, அவரது கட்சி தொண்டர்களையே, வியப்பில் ஆழ்த்தி உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'சிறப்பு அந்தஸ்து கோருவது எங்கள் உரிமை. அது தொடர்பாக, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது' என, ஆந்திர நிதித்துறை அமைச்சர் ராஜேந்திரநாத் மட்டும், கருத்து தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-பிப்-202015:42:01 IST Report Abuse
ஆப்பு செண்ட்டர்ல அவிய்ங்க ஆட்டம்... ஸ்டேட்ல நீய்ங்க ஆடிக்கோங்க..
Rate this:
Share this comment
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
09-பிப்-202014:04:47 IST Report Abuse
Raman Muthuswamy What is the use of crying now .. especially You as the Chief Ministers had failed to take these issues up in the Parliament as well as ing your MPs' votes for the Ruling Party ?? Chandrababu Naidu did it vehemently with the support of the Major Opposition Parties, but, He had to kiss the dust in the State Elections Consequently both the Telugu Rajyams are being governed by the whimsical persons .. Even the TIRUMALA Lord Venkatesa can't help these two States
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
09-பிப்-202009:23:39 IST Report Abuse
blocked user ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரித்ததே அக்கப்போர். இப்பொழுது நிதி இல்லை என்று புலம்பிகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X