அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி கூறியது பா.ஜ., கருத்து: நல்லக்கண்ணு பேட்டி

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement

நாகர்கோவில்; குடியுரிமை சட்டம் தொடர்பாக ரஜினி கூறியது பா.ஜ., கருத்துதான்,'' என இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயிகள் பாதிக்காமல் இருக்க அரசு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை 13 மாநிலங்கள் எதிர்த்துள்ளது. தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன்திட்டத்தை நிறுத்தவேண்டும்.அரசுக்கு எதிராகபேசுவோரையும், போராட்டங்கள் நடத்துபவர்களையும் பயமுறுத்த பார்க்கிறார்கள். மத்திய அரசு தங்கள் சுயலாபத்திற்காக சிலநடிகர்களை பயமுறுத்துகிறது. சில நடிகர்களை பயன்படுத்திக் கொள்கிறது.

குடியுரிமை சட்டம் பற்றி ரஜினி கூறியது பா.ஜ., கருத்து. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேட்டால் மாணவர்களின் வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. இது மிகவும் வேதனையான விஷயம்.இந்த முறைகேடு பெரிய இடத்தில் இருந்து துவங்குகிறது. இதில் ஈடுபட்டது யாராக இருந்தாலும்தண்டிக்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
09-பிப்-202020:40:04 IST Report Abuse
uthappa குடியுரிமை சட்ட திருத்தத்தால் இஸ்லாமியருக்கு என்ன தீமை என்பதை சொல்லவே மாட்டேங்குறீங்களே.அதை சொல்லுங்க.ரஜனி ஒன்றும் இல்லை என்கிறாரா, அதைத்தான் சட்டமும் சொல்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X