வில்சன் கொலையில் மேலும் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வில்சன் கொலையில் மேலும் ஒருவர் கைது

Added : பிப் 08, 2020
Share

நாகர்கோவில்; வில்சன் எஸ்.ஐ. கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.ஜன. 8- இரவு களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக குமரி மாவட்டம், திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல்சமீம், கோட்டார்இளங்கடையை சேர்ந்த தவுபீக் என இரண்டுபயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.பயங்கரவாதிகள் இருவருக்கும் வீடு எடுத்து கொடுத்ததுடன், கொலைக்குப்பின் அவர்கள் தப்பி செல்ல உதவி செய்ததாக திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்த செய்யது அலி என்பவரை நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் அழைத்துவரப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X