சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன்!

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன்!

பெண்கள் ஈடுபட விரும்பாத, நிலக்கரி சாம்பல் விற்பனை தொழிலில் களமிறங்கி, சாதனை படைத்து வரும் சென்னையை சேர்ந்த, 'பிஸ்மில்லா டிரேடர்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் நஜ்முன்னிசா: நடுத்தர குடும்பம் தான் எங்களுடையது. 10வது படிக்கும் போது, அப்பா இறந்து விட்டார். குடும்ப கஷ்டத்தால், பி.காம்., முதல் ஆண்டிலேயே நின்று விட்டேன். வங்கி தேர்வில் வெற்றி பெற்று, ஓராண்டு பணியில் இருந்தேன். திருமணமானதும், வீடு கட்ட துவங்கியிருந்தோம். ஹாலோ பிளாக் எனப்படும் சிமென்ட் கற்களைப் பயன்படுத்தினோம். அந்த கற்களை தயாரிக்க தேவையானது, 'பிளை ஆஷ்' எனப்படும், நிலக்கரி சாம்பல் தான்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்ததால், செங்கலுக்கு மாற்றாக, ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்த துவங்கினாங்க. எதிர்காலத்தில், இந்த கற்களுக்கு கடும் கிராக்கி இருக்கும் எனக் கருதி, அந்த கற்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு சென்று, தொழில் வாய்ப்புகளை தெரிந்து கொண்டேன். நிலக்கரி சாம்பல் அதிக அளவில் கிடைக்கும் அனல் மின் நிறுவனங்களுக்கு சென்று, நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
ஏற்கனவே, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் தெரியும் என்பதால், தொழிலுக்கு வசதியாக போய் விட்டது. சேமிப்பு பணம் முழுவதையும் இந்த தொழிலில் போட்டு, முழு அளவில் நிலக்கரி சாம்பல் கொள்முதல், விற்பனை தொழிலில் இறங்கினேன். அதற்காக, நிறைய லாரிகளை அமர்த்த வேண்டி வந்தது. அவற்றை வாடகைக்கு பிடிப்பதை விட, சொந்தமாக வாங்கிக் கொள்ளலாமே என நினைத்து, கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளை வாங்கினேன்.

அவற்றை, ஒரு நாள் கூட இடை விடாமல் இயக்கும் தந்திரத்தை அறிந்து, நிலக்கரி சாம்பல் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில், தரமான விதத்தில், குறைந்த செலவில் சப்ளை செய்ததால், என் நிறுவனத்தின் பெயர், தொழில் நிறுவனங்களின் மத்தியில் புகழ் பெறத் துவங்கியது. அப்படியே படிப்படியாக, நிறைய லாரிகளை வாங்கினேன். அவற்றிற்கு தேவையான டயர்களை வெளியிடங்களில் வாங்க வேண்டி வந்தது.
அதற்கு பதில், லாரி டயர் விற்பனை டீலர் தொழிலை துவக்கினேன். எங்கள் சொந்த லாரிகளுக்கு பொருத்தியது போக, பிறருக்கும் விற்பனை செய்கிறோம். இப்படியே இப்போது, 50 லாரிகளுக்கு மேல் உள்ளது; 200 லாரிகளாக உயர்த்த திட்டமிட்டு உழைக்கிறேன். புதிதாக இரண்டு தொழில்களில் ஈடுபடவும் திட்டமுள்ளது. எனினும், என் குழந்தையை இப்போதும், நான் தான் பள்ளி யில் கொண்டு விடுகிறேன். ௧ வயதாகும் மற்றொரு ஆண் குழந்தையையும், நான் தான் கவனிக்கிறேன்!


டீ, காபிக்கு மாற்றுக்கு நல்ல வரவேற்பு!


காபி, டீக்கு மாற்றாக, இயற்கையான மூலிகை டீ பாக்கெட்டுகளை தயாரிக்கும், வள்ளியம்மை அருணாசலம்: பூர்வீகம் காரைக்குடி. காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவு செய்த போது, பிறரை போலவே, நானும் மாற்று தேடினேன். வேலை பார்க்கிற இடங்களில், டீ, காபி தான் கிடைக்கும். அது வேண்டாம் என்றால், பால் கிடைக்கும் அல்லது சூடான தண்ணீர் தான். அப்போது தான், சூடான தண்ணீரில் முக்கி குடிப்பது போல, மூலிகை டீ பைகளை தயாரிக்கலாமே என முடிவு செய்தேன். சங்குப்பூ, துளசி, முருங்கை, நித்ய கல்யாணி, தொட்டாச் சிணுங்கி, ஆவாரம்பூ, லெமன் கிராஸ் என, எழு வகைகளில், டீ பை தயாரித்தேன்.

ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பதால், சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தயாரிப்பு பணிகளில் இறங்கினேன். சங்குப்பூ, பெண்களுக்கு நல்லது. முருங்கையின் பலன்கள், அனைவருக்கும் தெரிந்தது. சளி, இருமல் பிரச்னை களை தீர்க்க, துளசி நல்லது. நித்ய கல்யாணி, சிறுநீரக ஆரோக்கியத்திற்கானது. தொட்டாச்சிணுங்கி, உடல் பலம் தரும். ஆவாரம் பூ, நீரிழிவு நோயை குணப்படுத்தும். லெமன் கிராஸ், உடல் எடையை குறைக்கும். இவ்வாறு, ஒவ்வொரு மூலிகைக்கு, வெவ்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதை அறிந்து, சித்த மருத்துவர்கள் ஆலோசனை படை, டீ பை தயாரித்தேன். அவற்றை, மற்றவர்களுக்கு புரிய வைக்க, துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், ஒரு முறை இந்த டீ பையை பயன்படுத்தியவர்கள் பிடித்து, மீண்டும் வாங்க ஆரம்பித்தனர். இப்போது நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த மூலிகை டீ பையை வாங்கி, சூடான நீரில் முக்கி, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டியது தான். இதனால், பலன் கிடைத்தவர்கள் தொடர்ந்து அருந்தத் துவங்கினர். குறிப்பிட்ட பிரச்னை இருப்பவர்கள் மட்டுமின்றி, ஆரோக்கியம் விரும்பிகளும் இந்த டீ பையை பயன்படுத்த துவங்கினர். இவற்றில் செயற்கை மணமோ, நிறமோ, ரசாயனங்களோ இல்லை என்பதால், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம். மூலப் பொருட்களை வாங்கி, வீட்டில் உலர்த்தி, பொடியாக ஆக்குகிறோம். இதற்கு ஒரு வாரம் பிடிக்கும். மூலிகைகளை உலர்ந்த நிலையில் வாங்க வேண்டும் என்றால், வேலை ஒரே நாளில் முடிந்து விடும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவு கண்காட்சிகள், ஆர்கானிக் பொருட்கள் விற்கும் இடங்கள், அலுவலகங்களில் இவற்றை சப்ளை செய்கிறோம். விற்பனைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். டீ, காபிக்கு மாற்றாக பருக நினைப்பவர்கள், ஆர்வமாக வாங்குவர்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-பிப்-202021:29:57 IST Report Abuse
Matt P தொழில் என்று ஓன்று ஆரம்பித்தால், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது தான் முன்னேற்றம். இங்கேயெல்லாம் தொழில் ஆரம்பித்தால் , போட்ட பணாத்தை எடுப்பதற்கு ஒரு அஞ்சு ஆறு ஆண்டுகள் ஆகும். அதுவரை பொறுமையாக உழைக்க வேண்டும். ..அரசியலை தொழிலாக நினைத்தால் ,அதிகாரத்துக்கு வந்தால் லபக்கு என்று மொத்தமாக உள்ளெ தூக்கி போட்டு குடும்பத்தை நடத்துவானுக ...அது தானே நடக்குது நமது நாட்டில் ...உழைத்து உண்மையாக வாழும் வ வாழ்க்கையை வஇட வேறு ஏதும் மகிழ்ச்சையை கொடுத்து விடுமா?உண்மையாக பிரதிபலன் பார்க்காமல் , சமூக சேவையாக அரசியலையும் பயன்படுத்தினால் அதுவும் மகிழ்ச்சி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X