சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மோதி மாணவி பலி

Added : பிப் 08, 2020
Advertisement
 அரசு பஸ் மோதி மாணவி பலி

நாகப்பட்டினம்; நாகை அருகே நடந்த விபத்தில், பிளஸ் 1 மாணவி பலியானார்.

நாகை அடுத்த வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்த, மதியழகன் மகள் மகரஜோதி, 16; நாகூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று, வேனை தவறவிட்டதால், உறவினர் வீரமணி என்பவருடன், இருசக்கர வாகனத்தில், பள்ளிக்கு சென்றார்.கிழக்கு கடற்கரை சாலையில், பரவை பகுதியில், இருசக்கர வாகனம் மீது, வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில், மகரஜோதி இறந்தார்.வேளாங்கண்ணி போலீசார், அரசு பஸ் ஓட்டுனர், நாகையைச் சேர்ந்த மதன்குமார், 38, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X