அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளாளுக்கு பேசக்கூடாது 'எஸ்கேப்' ஆனார் சீனிவாசன்

Added : பிப் 08, 2020
Advertisement

திண்டுக்கல்; 'அ.தி.மு.க.,வில் அமைச்சர் ஜெயக்குமாரை தவிர ஆளாளுக்கு பேசக் கூடாது' என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் பள்ளியில் நடந்த விழாவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கினர்.அவர் பேசியதாவது: நுாறு சதவீத வெற்றிக்காக பள்ளிகளிடையே ஆரோக்கியமான போட்டி உள்ளது. மாணவர்கள் 'தினமலர்' உள்ளிட்ட நாளிதழ்களை தினசரி படிக்க வேண்டும். அவற்றில் வெளியாகும் செய்திகளை பள்ளி அறிவிப்பு பலகையில் எழுதி வைத்து, கல்வி மட்டுமின்றி விளையாட்டு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.ஆளாளுக்கு பேசக்கூடாது

விழா முடிந்ததும் அமைச்சரிடம், ''காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, 'நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனைக்கு பா.ஜ., காரணம்' என்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசுகிறாரே என நிருபர்கள் கேட்டனர்.'அதைப்பற்றியெல்லாம் கேட்காதீங்க. 'அமைச்சர் ஜெயக்குமாரை தவிர ஆளாளுக்கு ஒன்னு சொல்லக் கூடாது' என முதல்வர் பழனிச்சாமி உத்தரவு போட்டுள்ளார்.நம்ம ஊருக்கு தண்ணீர், தெருவிளக்கு, ரோடு வேண்டும் என்றால் என்னிடம் கேட்கலாம்' என பதிலளித்து 'எஸ்கேப்' ஆனார்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X