பொது செய்தி

தமிழ்நாடு

இரவிகுளத்தில் புதுவரவு 27 வரையாடு குட்டிகள்

Added : பிப் 08, 2020
Advertisement
 இரவிகுளத்தில் புதுவரவு 27 வரையாடு குட்டிகள்

மூணாறு; கேரளா, மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் இதுவரை 27 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதாக வனத் துறையினர் கண்காணிப்பில் தெரியவந்தது.

இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பார்ப்பதற்கு பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலாப்பயணிகளை வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர்.ஆண்டுதோறும் அவற்றின் பிரசவ காலங்களில் பயணிகள் ராஜ மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படும். அதன்படி கடந்த ஜன.,21ல், பூங்கா அடைக்கப்பட்டது. அங்கு தற்போது எவ்வித இடையூறுகளும் இன்றி நிசப்தமான சூழலில் வரையாடுகள் பிரசவித்து வருகின்றன.

இது வரை 27 குட்டிகள் பிறந்துள்ளதாக வனத்துறையினரின் கண்காணிப்பில் தெரியவந்தது. பயணிகள் இன்றி ராஜமலை பகுதி வெறிச்சோடி காணப்படுவதால், குட்டிகள் ரோடுகளில் சுதந்திரமாக துள்ளிக் குதித்து விளையாடி வருகின்றன.பூங்காவை மார்ச் 21ல் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளபோதும், வரையாடுகளின் பிரசவ காலம் நீடிக்கும் பட்சத்தில் திட்டமிட்டப்படி திறக்க முடியாது என அதிகாரிகள் கூறினர். ------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X