பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

Added : பிப் 08, 2020
Advertisement
 பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி தைசப்பூசத் திருவிழா பிப்.,11 வரை நடக்கிறது.

ஆறாம் நாளான பிப்.,7ல் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருகல்யாணம் நடந்தது. அன்று வெள்ளி தேரோட்டம் நடந்தது.

நேற்று மாலை 4:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. மேடான பகுதிகளில் கோயில் யானை கஸ்துாரி' தேரை தள்ளி நகர்த்தியது. திருத்தேர் மாலை 6:15 மணிக்கு நிலையை அடைந்தது.பிப்.,11 அன்று இரவு 7:00 மணிக்கு மேல் தெப்போற்ஸவம் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் ஜெயசந்தர பானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர். நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X