பொது செய்தி

தமிழ்நாடு

குமரி கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை

Added : பிப் 08, 2020
Advertisement

நாகர்கோவில்: குமரி மாவட்ட கோயில்களில் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது.பயிர் வளம் பெருகி, நாடு செழிப்படைய வேண்டி குமரி மாவட்ட கோயில்களில் தை பூச நாளில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.

வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அதை கோயில் மூலஸ்தானத்தில் வைத்து பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். கன்னியா குமரி பகவதி அம்மன் கோயில் இந்த பூஜைக்காக தேவசம்போர்டு வயலில் விளைந்த நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க பகவதி அம்மன் கோயிலுக்கு பவனியாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப் பட்டது.

நெற்கதிர் மாலை கட்டப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜாகோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரகோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் உள்பட பல கோயில்களில் இந்த பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து நெற்கதிர்களை பிரசாதமாக பெற்று சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X