சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் வெட்டி கொலை மாயமான மகனுக்கு வலை

Added : பிப் 08, 2020
Share
Advertisement
 பெற்றோர் வெட்டி கொலை மாயமான மகனுக்கு வலை

பேரூர்; தாய், தந்தையை வெட்டி கொலை செய்து தப்பியோடிய மகனை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, விராலியூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர், சுந்தரம், 70. இவரது மனைவி, துளசி, 65. இவர்களுக்கு, ஐந்து பெண் குழந்தைகள்; ஒரு மகன் உள்ளனர். மது போதைக்கு அடிமையான, அவரது மகன் கார்த்திகேயன், 31, தன் இரண்டு மனைவியரையும் பிரிந்து, ஐந்து ஆண்டு களாக, பெற்றோருடன் வசிந்து வந்தார். இந்நிலையில், 6ம் தேதி நடந்த தகராறில், கார்த்திகேயன், அரிவாளால், தன் தாயின் இடது காலில் வெட்டியுள்ளார். அருகில் இருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் சேர்ந்தனர்.சிகிச்சைக்கு பின், துளசி, நேற்று முன்தினம் இரவு, வீடு திரும்பியுள்ளார். இரவு, 7:30 மணிக்கு, வீட்டுக்கு வந்த மகன், மீண்டும் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், நேற்று காலையில், வீடு திறக்கப்படாததால், அருகில் வசிப்போர் சென்று பார்த்துள்ளனர்.அப்போது, வெட்டு காயங்களுடன் சுந்தரம், துளசி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அருகே, ரத்தம் படிந்த அரிவாள் கிடந்துள்ளது. கார்த்திகேயன் தலைமறைவாகிஉள்ளார். தனிப்படை போலீசார், கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

கடந்த, 6ம் தேதி, துளசியை வெட்டிய கார்த்திகேயனை, ஆலாந்துறை போலீசார், பிடித்து சென்றுள்ளனர். ஐந்து பெண் குழந்தைகளுக்கு பின் பிறந்த, ஒரே மகனை, சிறைக்கு அனுப்ப மனமில்லாத தந்தை, போலீசில் புகார் கொடுக்கவில்லை. இந்நிலையில், துாங்கி கொண்டிருந்த பெற்றோரை, மகன் இரக்கமின்றி வெட்டி கொலை செய்துஉள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X