அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநில தலைவர் விவகாரம் இல.கணேசன் சூசகம்

Added : பிப் 08, 2020
Advertisement

ஈரோடு: ''பா.ஜ.,வில், 10 ஆண்டு காலம் உறுப்பினராக இருப்பவரே, தலைவராக முடியும் என்பது, கட்சி விதி,'' என, அக்கட்சியின் மூத்த தலைவர், இல.கணேசன் கூறினார்.

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், இல.கணேசன், ஈரோடில் நேற்று கூறியதாவது:மோடி பிரதமரான, முதல் ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், ஊழல் தடுப்பு வழிமுறை, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது ஐந்தாண்டில், நாட்டில் நீண்ட காலமாக தீர்வு காணாத பிரச்னைகளை தீர்க்க, நடவடிக்கை எடுத்து வருகிறார்.காஷ்மீர் தனி அங்கீகாரம் ரத்து, முத்தலாக் சட்டம், அயோத்தி ராமர் கோவில் பிரச்னைக்கு தீர்வு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி உள்ளார்.

பிற நாட்டவரை, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி, ஸ்டாலின் போன்றவர்கள், ஓட்டு வங்கி பாதிக்கும் என்பதால், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனர்.பா.ஜ.,வை சேர்ந்த ஒருவரே, தமிழகத்தின் மாநில தலைவராக வருவர். 'தலைவராக நியமிக்கப்பட்டால் தான் வருவேன்' என கூறுபவருக்கு, கட்சியில் பதவி கொடுப்போம். ஆனால், தலைவராக வேண்டுமானால், 10 ஆண்டு காலம், பா.ஜ., உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது, கட்சியின் விதி. இதை மாற்றும் அதிகாரம், மத்திய தலைமைக்கு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X