டில்லி சட்டசபை தேர்தலில் 57 சதவீத ஓட்டுப்பதிவு!

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (3+ 88)
Advertisement
டில்லி, சட்டசபைதேர்தல், 57 சதவீதம், ஓட்டுப்பதிவு!

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில், 57 சதவீதம் ஓட்டுகள் பதிவானது, கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது, இது, 10 சதவீதம் குறைவு. ஓட்டு எண்ணிக்கை, நாளை மறுதினம் நடக்கிறது. டில்லியில் ஆட்சி அமைப்பது யார் என, அன்று மதியம் தெரியும்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கு, நேற்று தேர்தல் நடந்தது. மொத்தம், 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திஉள்ளது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம், இரண்டு தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், 70 தொகுதிகளிலும், நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. கடும் குளிர் காரணமாக, துவக்கத்தில், ஓட்டுப்பதிவு ஆமை வேகத்தில் நடந்தது. முதல் ஒரு மணி நேரத்தில், 3.6 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாயின. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி,, ராகுல். மேற்கு டில்லி பா.ஜ., எம்.பி., பர்வேஷ் வர்மா, டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி உட்பட பலர், காலையிலேயே ஓட்டளித்தனர்.

டில்லி சட்டசபை தேர்தல் சனிக்கிழமை நடந்தது. தேர்தலுக்கு பின் பல்வேறு செய்திச்சேனல்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, 3வது முறையாக டில்லியில் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. கெஜ்ரிவால் ஹாட்ரிக் அடிக்கிறார். பா.ஜ.வுக்கு 13 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுடில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், தன் மனைவி சுனிதா, மகன் புல்ஹித்துடன் வந்து, ஓட்டளித்தார். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, தன் கணவர் வாத்ரா, மகன் ரோஹன் ராஜிவ் வாத்ரா ஆகியோருடன் வந்து ஓட்டளித்தார். பிரியங்காவின் மகன், முதல்முறையாக, ஓட்டளித்துஉள்ளார். மதியம், 12:00 மணிவரை, 20 சதவீத ஓட்டுகள் கூட பதிவாகவில்லை. குளிர் குறைந்து, வெயில் அதிகரித்த பின், ஓட்டுப்பதிவில் சற்று வேகம் பிடித்தது. மாலை, 4:00 மணி அளவில், 44 சதவீத ஓட்டு கள் பதிவாகியிருந்தன. மாலை, 6:00 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிந்தது. 70 தொகுதிகளிலும், மொத்தம், 57 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது, 2015 தேர்தலில் பதிவானதை விட, 10 சதவீதம் குறைவு. 2015 தேர்தலில், 67.47 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த தேர்தலில், ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது, கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என்பது உண்மை. காங்கிரஸ் சார்பில், சோனியா பிரசாரம் செய்யவில்லை. ராகுலும், பிரியங்காவும், ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தனர். அதனால், தேர்தலில், ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே தான், போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கை, நாளை மறுதினம் நடக்கிறது. அன்று மதியமே, அனைத்து முடிவுகளும் வெளியாகி, ஆட்சியைப் பிடிப்பது யார் என, தெரிந்து விடும்.

ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், வெளியிட்ட பதிவில், ''ஓட்டு வங்கி அரசியல் மற்றும் பொய்களில் இருந்து, தலைநகர் டில்லியை மீட்க, அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்,'' என, கூறியிருந்தார். முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், ''அனைவரும் ஓட்டளியுங்கள், குறிப்பாக, பெண்கள், வீட்டு பொறுப்புகளை தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். ''நாட்டையும், டில்லியையும் சுமக்கும் பொறுப்பும், பெண்களுக்கு உள்ளது. அதனால், ஓட்டளிக்க செல்லுங்கள்,'' என, கூறியிருந்தார்.


போராட்டத்தை நிறுத்தாமல் ஓட்டளிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக் பகுதி யில், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில், இந்தப் போராட்டம் தான் பெரும் பிரச்னையாக பேசப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நாளான நேற்றும், ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழு, குழுவாக சென்று, ஓட்டளித்த பின், போராட்ட இடத்துக்கு திரும்பினர்.


ஆம் ஆத்மி தொண்டரை அறைய காங்., பெண் வேட்பாளர் முயற்சி


சாந்தினி சவுக் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா போட்டியிடுகிறார். அவர், 2015ல், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு, சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார். கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஆண்டு காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில், டில்லியின், மஞ்சு கா தில்லா பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி முன் கோஷமிட்ட ஆம் ஆத்மி தொண்டர் ஒருவரை அறைய, அல்கா லம்பா கையை ஓங்கினார். ஆனால், அந்த நபர் நகர்ந்துவிட்டார்.

அங்கு வந்த போலீசார், அந்த நபரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இருப்பினும், அவர்களை வழிமறித்த அல்கா லம்பாவும், காங்கிரஸ் தொண்டர்களும் அறைய முயற்சித்தனர். இது தொடர்பான, 'வீடியோ' காட்சிகள் வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அல்கா லம்பா கூறுகையில், ''ஓட்டுச்சாவடியில் இருந்து வெளியே வந்த போது, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர் என்னை மோசமாக விமர்சித்தார். அதனால், அவரை அறைய முயற்சித்தேன்,'' என்றார்.


ஜனநாயக கடமையை நிறைவேற்றிய, '111'


டில்லி, சி.ஆர்.பார்க் பகுதியில் வசிப்பவர், காளிதாரா மண்டல், 111. கடந்த, 1952ல் நடந்த முதல் தேர்தல் முதல், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் வரை, அனைத்து தேர்தல்களிலும், தன் ஜனநாயக கடமையை, மண்டல் நிறைவேற்றியுள்ளார். டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட, தன் மகன், பேரன் மற்றும் குடும்பத்தினருடன், சக்கர நாற்காலியில் மண்டல் வந்தார். அவரை தேர்தல் அதிகாரிகள் வரவேற்று, ஓட்டளிக்க வைத்தனர்.
கைவிரலில் வைக்கப்பட்ட மையை மகிழ்ச்சியாக காட்டிய மண்டல், கூறியதாவது: இப்போது வங்கதேசத்தில் உள்ள பரிசாலில், 1908ம் ஆண்டு பிறந்தேன். 1971ம் ஆண்டிலிருந்து, டில்லியில் வசித்து வருகிறேன். அனைத்து தேர்தல்களிலும், என் கடமையை தவறாமல் நிறைவேற்றிஉள்ளேன். ஓட்டுச் சீட்டு முறையில் ஓட்டளித்தது, எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


கருத்து கணிப்பு முடிவுகள்


டில்லி சட்டசபை தேர்தல் முடிந்த பின் வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைக்கும் என, தெரிவித்து உள்ளன. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், ஆம் ஆத்மி, 45 - 50 தொகுதிகளிலும், பா.ஜ., 20 - 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என, தெரிவித்துள்ளன. கடந்த தேர்தலில், ஆம் ஆத்மி, 67 இடங்களிலும், பா.ஜ., மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.


3வது முறையாக ஆட்சி அமைப்போம்


''டில்லியில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்,'' என, முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஓட்டளித்த பின், டுவிட்டரில் அவர் கூறியிருந்ததாவது: ஆம் ஆத்மி அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த பணிகள், மக்களுக்குத் தெரியும். அதனால், மூன்றா வது முறையாக நாங்கள் ஆட்சியமைக்க, மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். என் மகன் புல்ஹித் முதல் முறையாக ஓட்டு போட்டுள்ளார்.

இளைஞர்கள் அனைவரும், ஓட்டளிப்பதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். அப்போதுதான், ஜனநாயகம் வலுப்படும். 'டிவி' சேனல் ஒன்றில், நான், 'ஹனுமன் சாலிசா' சுலோகத்தை கூறினேன். அதிலிருந்து, பா.ஜ.,வினர், என்னை கேலி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், ஹனுமன் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன். அதனால், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். இது என்ன விதமான அரசியல். கடவுள், அனைவருக்கும் பொதுவானவர். அனைவருக்கும் அவர் அருள் புரிகிறார். இவ்வாறு, கெஜ்ரிவால் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (3+ 88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
09-பிப்-202012:09:11 IST Report Abuse
Ashanmugam இந்த தேர்தலுடன் ஆம் ஆத்மி கட்சியும், கெஜ்ரிவால் ஆட்சியும் முடிவு பெற்றது. இனி கெஜ்ரிவால் பழையபடி தன் சொந்த தொழிலான Income Tax Practitioner வேலையை பார்க்க வேண்டியதுதான். இந்த தேர்தலில் முழு மெஜாரிட்டியும் எந்த கட்சிக்கும் கிடைக்காத பட்சத்தில் மகாராட்டிரம் மாநிலம் போல் ஆட்சி அமைக்க இழுபறியாகும்?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
09-பிப்-202009:17:30 IST Report Abuse
blocked user தலைநகரில் அதுவும் சிறப்பாக ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு இடத்தில் இவ்வளவுதான் என்பது ஜனநாயகத்தின் தோல்வியை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-பிப்-202008:40:58 IST Report Abuse
Pannadai Pandian வோட்டு சதவிகிதம் குறைந்துள்ளது…..இது எந்த திசையை நோக்கி செல்கிறது ??? மேல் தட்டு இந்துக்கள் வாக்குகள் பாஜகவுக்கு சென்றிருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X