சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வேன் மீது பஸ் மோதல் ஹரியானாவைச் சேர்ந்த 3 பேர் பலி

Added : பிப் 08, 2020
Advertisement
 சுற்றுலா வேன் மீது பஸ் மோதல் ஹரியானாவைச் சேர்ந்த 3 பேர் பலி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, சுற்றுலா வேன் மீது, தனியார் பஸ் மோதியதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்; 1

0 பேர் காயமடைந்தனர்.ஹரியானா மாநிலம், சாஜர் மாவட்டம், பகதுார்காட் பகுதியைச் சேர்ந்த, 20 பெண்கள் உட்பட, 41 பேர், ரயில் மூலம், தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து, இரு வேன்களில், கன்னியாகுமரி புறப்பட்டனர்.திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில், நேசநேரி விலக்கு அருகே, சிறுநீர் கழிப்பதற்காக, வேனை, சாலையோரம் நிறுத்த முயன்றபோது, கோயம்புத்துாரில் இருந்து, களக்காடு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதியதில், வேன் கவிழ்ந்தது.பஸ், சாலையோர தடுப்பை உடைத்தபடி நின்றது.

இந்த விபத்தில், வேனில் வந்த சாயர், 60, ரத்னி தேவி, 62, சையத்ரத்னி, 63, ஆகியோர் பலியாகினர்.படுகாயமடைந்த, 10க்கும் மேற்பட்டோர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X