'இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பு நிறைவேறும் நம்பிக்கை உள்ளது'

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (4+ 7)
Advertisement
 'இலங்கைதமிழர்,எதிர்பார்ப்பு,நிறைவேறும்,நம்பிக்கை,

புதுடில்லி : நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன், பிரதமர் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 'இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்ப்பை, இலங்கை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' என, மோடி குறிப்பிட்டார்.


எதிர்பார்ப்பு


நம் அண்டை நாடான இலங்கையில், கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலில் வென்று, கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றார். தன் முதல் வெளிநாட்டு பயணமாக, அவர் இந்தியாவுக்கு வந்தார். கோத்தபய பதவியேற்றதும், அவருடைய மூத்த சகோதரரான, மகிந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார். மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசியலில் மிகவும் வலுவானவராகக் கருதப்படும் மகிந்த ராஜபக்சே, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இந்த ஐந்து நாள் பயணத்தின்போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில், சீனாவுடன் நெருக்கமாக இருந்தார். அதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயன்றது.


பயங்கரவாதம்


இந்த நிலையில், அவருடைய இந்தப் பயணம், இந்தியா, இலங்கை இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, மகிந்த ராஜபக்சே இடையேயான இரு தரப்பு பேச்சு, டில்லியில் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் ராணுவத் துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக, ஜனாதிபதி மாளிகையில், மகிந்த ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவரை சந்தித்து பேசினார்.

இந்தப் பயணத்தின்போது, மகிந்த ராஜபக்சே, வாரணாசி, சாரனாத், புத்த கயா, திருப்பதிக்கு செல்கிறார். டில்லியில் நேற்று நடந்த இரு தரப்பு பேச்சுக்குப் பின், பிரதமர் மோடி கூறியதாவது: பல்வேறு அம்சங்கள் குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் விவாதிக்கப்பட்டது. இலங்கையின் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்பது, இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கு முக்கியமாகும்.

நம் சிறந்த நட்பு நாடான இலங்கையில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, தொடர்ந்து ஆதரவாகவும், உதவியாகவும் இருப்போம். பயங்கரவாதம் என்பது, இரு நாடுகளுக்கும், முக்கியமான பிரச்னையாகும். பயங்கரவாதத்தை தடுக்க இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தோம். இதைத் தவிர, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, இலங்கை வாழ் தமிழர்கள் நலன் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மிக நீண்ட காலமாக உள்ள இந்தப் பிரச்னையில் சுமுக தீர்வு காணும் வகையில், அவர்களுக்கு சம உரிமை, நீதி, அமைதி கிடைப்பதை, இலங்கை அரசு உறுதி செய்யும் என நம்புகிறோம்.

அதேபோல் தமிழக மீனவர் தொடர்பான பிரச்னையில், மனிதநேயத்துடன் அணுக இரு தரப்பும் முடிவு செய்தோம். இந்த விவகாரங்கள் தொடர்பாக, தொடர்ந்து, இலங்கையுடன் பேசுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
09-பிப்-202015:55:39 IST Report Abuse
dandy இன்று இலங்கை சீனாவின் கட்டு பாட்டில் ...இந்திய தூரே இருந்து புதினம் பார்க்க வேண்டியதுதான் ...SOUTH BLOCK புத்திசாலிகளின் மடத்தனத்திற்கு கிடைத்த பரிசு
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
09-பிப்-202009:18:50 IST Report Abuse
blocked user தமிழகர்கள் கோ பேக் மோடி என்று சொன்னல்க்கூட தமிழர்கள் மீது அக்கறை சிறிதும் குறையவில்லை. மும்மியமான பதவிகளில் தமிழர்களை வைத்து அழகுபார்க்கிறார். அருமை. தமிழர்கள் என்றும் மோடிக்கு கடமைப்பட்டு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-பிப்-202008:47:06 IST Report Abuse
ஆரூர் ரங் கடைசி சிங்கள அரசியல்வாதி இருக்கும்வரை எந்த ஈழத்தவரும் மானம் மரியாதையோடு வாழவே முடியாது புத்த சாமியார்கள் சிங்கள அரசியல்வாதிகளை திருந்தவிடமாட்டார்கள். உண்மையில் புத்தருக்கும் அவர்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை .ஊரூராக அஹிம்சை பேசிக்கொண்டே மூன்று வேளையும் மிருக உணவு . பலர் அரச பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் . இனவெறி பிடித்தவர்கள். அவர்களின் வலிக்குவாராத தலைவர்களைக் கொன்ற வரலாறுமுண்டு . இதற்கு ஏன் புத்த சாமியார் வேஷமோ? இவர்கள் வழியில் நம்மூரு குருமா க்களும் தங்களை புத்தரின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்வது வினோதம்
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
09-பிப்-202013:22:04 IST Report Abuse
தமிழ்வேள்ஆரூர் ஜி , சிங்கள பவுத்தர்கள் பவுத்தர்கள் அல்ல ...பெந்தகோஸ்தேவுக்கு தாய் அமைப்பு ...முரட்டு சிந்தனை அற்ற தானம் இவர்களது தனி சொத்து இவர்களை பார்த்துதான் பெந்தகொஸ்தே கிறிஸ்தவம் வேர்விட துவங்கியது ......மூடத்தனத்தில் இரண்டு பேருக்கும் வேறுபாடு கிடையாது [ துவராடை தவிர ]...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X