அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரேமலதா விமர்ச்சிக்க வேண்டாம்: அதிமுக., எச்சரிக்கை

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை; 'கூட்டணியை விமர்சிக்க வேண்டாம்' என பிரேமலதாவிற்கு, அ.தி.மு.க., தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வுடன், 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., முதன் முறையாக கூட்டணி அமைத்தது. ஆட்சியை பற்றி விமர்சனம் செய்ததால், அதே ஆண்டு, உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., கழற்றி விடப்பட்டது.கோரிக்கை'தே.மு.தி.க.,வுடன், இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என, மறைந்த ஜெயலலிதா அறிவித்தார். அவரது மறைவிற்கு பின், 2019 லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன், அ.தி.மு.க., கூட்டணியை புதுப்பித்தது. சமீபத்தில், 27 மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது.ஆனால், பா.ம.க., - பா.ஜ.,வை காட்டிலும், குறைவான இடங்கள் தான், தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டன.

இது, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டுமின்றி, அக்கட்சி தலைமைக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டணியை பயன்படுத்தி, அரசு ஒப்பந்தம், அறங்காவலர் பதவி, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவையைப் பெற, தே.மு.தி.க., தலைமை முயற்சித்தது. அதற்கும், அமைச்சர்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் துறைகளிலும், தே.மு.தி.க., கோரிக்கைகள் எடுபடவில்லை.

இது, அக்கட்சி தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதே நிலை தொடர்ந்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், நம்மை ஏமாற்றி விடுவர் என்ற, மனநிலைக்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வந்துள்ளனர். இத்தகவலை, கட்சியின் பொருளாளர் பிரேமலதாவின் காதுக்கு எடுத்து சென்றனர். இதையடுத்து, கூட்டணியை விமர்சிக்கும் வகையில், 'கூட்டணி என்பதால், குட்ட குட்ட நாங்கள் குனிய மாட்டோம்' என, பிரேமலதா கூறினார். இது, அ.தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கூட்டணியில், பா.ம.க.,வை வைத்து கொண்டால் போதும்.கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க.,வின் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தியும், வட மாவட்டங்களில், பா.ம.க., செல்வாக்குடன் வெற்றி கனியை பறித்து விடலாம் என, கணக்கு போடுகிறது. தே.மு.தி.க., கூட்டணியை விட்டு வெளியேறினால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற முடிவிற்கு, அ.தி.மு.க., வந்துள்ளது.

இதன் காரணமாகவே, பா.ம.க.,விற்கு கொடுக்கும் முக்கியத்துவம், தே.மு.தி.க.,விற்கு தரப்படவில்லை.'பா.ஜ.,வின் அழுத்தம் காரணமாகவே, தே.மு.தி.க.,வை கூட்டணியில் வைத்துள்ளோம். விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்குகளை, ரத்து செய்துள்ளோம். சமரச முயற்சிஎனவே, கூட்டணியை பயன்படுத்தி, காரியம் சாதிக்கவில்லை எனக் கூறுவது தவறு. இனியும் கூட்டணி பற்றி பேசினால், யோசிக்காமல் கழற்றி விடுவோம்' என, அ.தி.மு.க., தலைமை, பிரேமலதாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து, 'கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; பலமாக இருக்கிறது' எனக் கூறி, பிரேமலதா சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
09-பிப்-202015:35:29 IST Report Abuse
Baskar வாய் கொழுப்பு அதிகம் உள்ளவர். அதனால் தான் விஜயகாந்த் வீணாய் போனார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X