அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோஷம் பா.ம.க.,வால் தி.மு.க.,வுக்கு நெருக்கடி?

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement

தி.மு.க.,வில், பெரும்பான்மை ஜாதிக்கு பிரதி நிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற, பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி, அக்கட்சிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு கோஷத்தை, பா.ம.க., கையில் எடுத்துள்ளது.

தி.மு.க.,வை ஜென்ம விரோத கட்சியாக, பா.ம.க., பாவிக்க துவங்கி உள்ளது. அதனால் தான், 'முரசொலி கட்டடம், பஞ்சமி நிலத்தில் உள்ளது' என்ற குற்றச்சாட்டை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். கணக்கெடுப்புஇந்த குற்றச்சாட்டு தொடர்பாக, பா.ம.க., மீது தி.மு.க., அவதுாறு வழக்கு தொடுத்துள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம்பெற வாய்ப்பு இல்லை என்பது, உறுதியாகி உள்ளது. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், பா.ம.க.,வை, தி.மு.க., கூட்டணியில் சேர்க்க விரும்பினார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை. பா.ம.க.,வை சேர்த்தால், பொருந்தா கூட்டணியாகி விடும்; விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியேறி விடும். வட மாவட்டங்களில், மற்ற ஜாதியினர் ஓட்டுகளும், தி.மு.க.,வுக்கு கிடைக்காமல் போய் விடும். எனவே, பா.ம.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என்பதில், ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஜாதி ரீதியாக நெருக்கடி கொடுக்க, பா.ம.க., புது வியூகம் அமைத்துள்ளது. அதாவது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோஷத்தை, பா.ம.க., முன்னிலைப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, தி.மு.க.,வில், பெரும்பான்மை ஜாதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சமூக நீதி கடைபிடிக்கப்படுவதில்லை என்ற, குற்றச்சாட்டை முன்வைக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 1989ல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு, அப்போதைய கவர்னர் அலெக்சாண்டரிடம், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மூப்பனாரால் பரிந்துரைக்கப்பட்டு, வெங்கடகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது.'பெரும்பான்மை ஜாதியினரின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு இல்லை என்பது, வெட்ட வெளிச்சமாகி விடும். எனவே, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டாம்' என, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், பொதுச்செயலர் அன்பழகன் வலியுறுத்தியதால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அந்த கமிஷன் கலைக்கப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சி நடந்தது. அப்போது, தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றிருந்தபோது, 'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்' என, கருணாநிதியிடம், ராமதாஸ் கோரிக்கை வைத்தார். ஆனால், தி.மு.க., அரசு, ராமதாசின் கோரிக்கையை அலட்சியம் செய்தது. வரும் சட்டசபை தேர்தலில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, இதர சமுதாய கட்சிகளையும் தன்னுடன் சேர்த்து, அனைத்து ஜாதிகள் கூட்டமைப்பை உருவாக்கி, அ.தி.மு.க., கூட்டணியில், குறைந்தபட்சம், 80 தொகுதிகளை பெறுவதற்கு, ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அதனால் தான், சமீபத்தில் சென்னை, தி.நகரில் நடந்த, பா.ம.க., செயற்குழுக் கூட்டத்தில், ராமதாஸ் பேசுகையில், '70 முதல், 80 சட்டசபை தொகுதிகளை, பா.ம.க., கைப்பற்றினால், ஆட்சியை பிடிக்கும் திட்டம் உள்ளது' என, பிரகடனப்படுத்தினார். ஆர்ப்பாட்டம்வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணி, தி.மு.க., அணி, ரஜினி அணி என, மூன்று அணிகள் போட்டியிடும் பட்சத்தில், பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், எளிதாக வெற்றி பெறலாம். பா.ம.க., தயவில் தான், திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். அப்போது, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவியை பெறலாம் என்ற கணக்கையும், ராமதாஸ் வகுத்து வைத்துள்ளார். அதனால் தான், ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, சென்னையில், பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
WEBWORLD - Periyakulam,இந்தியா
09-பிப்-202018:56:06 IST Report Abuse
WEBWORLD ஹா ஹா ஹா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X