அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு, 'இமேஜ்' உருவாக்கி தந்த ஸ்டாலின் : பிரசாந்த் கிஷோர் மீது தி.மு.க.,வினர் புலம்பல்

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (4)
Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மாணவர்களின் போரட்டத்தையும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்து, நடிகர் ரஜினிக்கு, மிகப்பெரிய இமேஜை உருவாக்கி தந்துள்ளது.

இதற்கு காரணமாக இருந்த, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.வரும் சட்டசபை தேர்தலில், பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக, ஸ்டாலின், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, ஐபேக் நிறுவனம், தமிழகத்தில் தேர்தல் பணிகளை, ஜரூராக துவக்கி உள்ளது. தகவல் பகுப்பாய்வு, 'டிஜிட்டல் மார்க்கெட்டிங், கிராபிக்ஸ் டிசைன் அண்ட் வீடியோ' மற்றும் மனிதவளம், தலைமைப் பணி, ஊடகம், மக்கள் தொடர்பு, மின்னணு தொழில்நுட்ப பிரசாரம் என, பல்வேறு துறைகளுக்கு, ஐபேக் நிறுவனம் ஆட்களை தேர்வு செய்துள்ளது.சமீபத்தில், ரஜினி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அளித்த பேட்டியில், 'மாணவர்கள் எதையும் ஆராயாமல், போராட்டம் செய்தால், அரசியல்வாதிகள், அவர்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது' என்றார்.

ஆலோசனை
இதற்கு ஸ்டாலின், 'ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும், ஆதிக்க மனப்பான்மையினர், இப்படித் தான் திரித்துச் சொல்லி திசை திருப்பினர். இறுதியில் வென்றது, மாணவர்கள் தான்' என, ரஜினிக்கு பதிலடி கொடுத்தார். ரஜினியின் கருத்தையும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியதால், ரஜினிக்கு மிகப்பெரிய, 'இமேஜ்' உருவாகிறது என்ற கருத்து, சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

ஸ்டாலின் கருத்தின் பின்னணியில், பிரசாந்த் கிஷோர் இருப்பதால், அவர், ஹிந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரியாமல், தவறான தகவலை, ஸ்டாலினுக்கு தெரிவித்து விட்டார் என, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர், புலம்புகின்றனர்.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த, 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை தோற்கடிக்க, சுதந்திரா கட்சியின் தலைவர் ராஜாஜியின் ஆலோசனையில், ஆளுங்கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக, 'ஒன் டூ ஒன்' என்ற அடிப்படையில், தி.மு.க., தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எதிர்ப்புமேலும், 7 சதவீதம் ஓட்டுகள் இருந்த சுதந்திரா கட்சி; 1.3 சதவீதம் ஓட்டுகளை வைத்திருந்த, பார்வர்டு பிளாக் கட்சி; 9.5 சதவீதம் வைத்திருந்த, நாம் தமிழர் கட்சி; 1.4 சதவீதம் இருந்த தலித் சமுதாய கட்சி; 3 சதவீதம் உள்ள சோஷசலிஸ்ட் கட்சி; 4 சதவீதம் கொண்ட கம்யூனிஸ்ட்களை ஒருங்கிணைத்து, காங்கிரசை தோற்கடித்தனர். மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி என, அப்போது கூறினாலும், 45 சதவீதம் ஓட்டுகளை வைத்திருந்த காங்கிரஸ் கட்சியால், 40 சதவீதம் ஓட்டுகளை தக்கவைக்க முடிந்தது.

எனவே, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை, ரஜினியின் கருத்துடன், ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியிருக்கக் கூடாது. இன்னும் கட்சியே துவங்காத ரஜினிக்கு, 40 சதவீதம் ஓட்டுகள் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை, ஸ்டாலினே உருவாக்கி கொடுத்து விட்டார்.புறக்கணிப்புஅவசரப்பட்டு, ரஜினி கருத்துக்கு ஸ்டாலின் பதில் சொல்லியிருக்க வேண்டாம். ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு, அவர் கட்சி துவக்கிய பின், பதில் சொல்கிறேன் என, ஸ்டாலின் புறக்கணித்திருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஸ்டாலின் பதிவு வரலாற்று பிழை!அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை:குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்ப்பு போராட்டத்தையும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் ஒப்பிட்டு, 'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் பதிவிட்டது, வரலாற்று பிழை. மாணவர்கள், ஒருபோதும் ஸ்டாலினை நம்ப மாட்டார்கள். கடந்த கால வரலாறுகளை தெரிந்து கொள்ளாமல், பிரசாந்த் கிஷோர் இயக்கத்தில், தி.மு.க., படம், 10 நாட்களை தாண்டி ஓடாது. தன்னை நம்பாத ஒருவரால், தலைவராக ஜொலிக்க முடியாது என்பதை, ஸ்டாலினுக்கு காலம் உணர்த்தும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.கருணாநிதி பிள்ளையா, 'ஐபேக்' பிள்ளையா?தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் கைக்கோர்த்தது குறித்து, சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள்:l மேடைக்கு மேடை, நான் கருணாநிதியின் பிள்ளை என்று சொல்லி, ஓட்டு கேட்ட ஸ்டாலின், நாளை முதல், 'நான் ஐபேக்கின் பிள்ளை' என்று, ஓட்டு கேட்க போகிறார்l நவீன யுக பிரசாரத்திற்கு, பிரசாந்த் கிஷோர் தேவை என, சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப அணியை, முதன் முதலில் உருவாக்கியது, தி.மு.க., தான். தி.மு.க., - ஐ.டி., அணிக்கு தெரியாத இணையதள சூட்சுமத்தையா, பிரசாந்த் கிஷோர் செய்து விட போகிறார்?l முதலாளி, நீங்க கொடுத்த சம்பளம், 'யூ டியூப்'ல உங்க உளறல் வீடியோவை நீக்குறதுலயே சரியா போச்சு. இந்த, 'டுவிட்டர், பேஸ்புக்'குல இருந்து, உங்களை கழுவி ஊத்துன, வீடியோக்களை நீக்குறதுக்கு, இன்னும் பணம் தேவைப்படுகிறது.இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
09-பிப்-202015:31:34 IST Report Abuse
Baskar இவனுக்கு இதே வேலை.தொண்டர்களை தூக்கி விடமாட்டான் ஆனால் மற்றவர்களை நன்றாக தூக்கி விடுவான். குழிக்குள் இருந்து கொண்டு இவனது தலைவர்களே பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள். என்ன இந்த பையன் கட்சியை விரைவில் விற்று விடுவானா இல்லை வட்டிக்கு விடுவானா என குழம்பி சிரிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
09-பிப்-202013:48:51 IST Report Abuse
s.rajagopalan காங்கிரஸ் வாரிசு அரசியலில் ராகுல் காலை வாரிக்கொண்டிருக்கிறார் ,,, தி மு க வாரிசு.... அரசியலில்.....ஸ்டாலின் .... வாழ்நாள் முழுதும் கருணாநிதியின் நிழலிலேயே இருந்தவர் ...ஆயினும் இப்படி குழப்புவது ....அவரின் தரத்தை சுட்டிக்காட்டுகிறது ....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-பிப்-202012:41:31 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு கையில் திராவிடஸ்தான் கொடியும் மற்றொரு கையில் பாகிஸ்தான் கொடியும் ஏந்தி இரு பிரிவினைகளுக்கும் ஒரே நேரத்தில் போராடியது கருணாநிதி ( அவரே எழுதியது) இப்போ பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு சுடாலின் குடியுரிமை கேட்டுப் போராடுவது பொருத்தம்தான் . இங்கு லஷ்கர் முஜாஹிதீன் , ஐ எஸ் ஸை வளர்த்தல் அவர்களது கடமையல்லவா ஆரிய கிஷோரே? . முதலில் திராவிஷ அரசியல் வரலாறு படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X