பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட் கூட்ட தொடருக்காக துறைவாரியாக விபரங்கள் சேகரிப்பு

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை: பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க உள்ளதால், ஒவ்வொரு துறையிலும், அவசியமான தேவைகள் குறித்தவிபரங்களை, உடனடியாக அனுப்பும்படி, துறைத் தலைவர்கள் உத்தரவிட்டுள்னளர்.

தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை, வரும், 14ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். அதன்பின், துறைவாரியாக, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்கும்.அப்போது, அமைச்சர்கள், தங்கள் துறை தொடர்பாக, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர். ஒவ்வொரு துறையிலும், செயல்படுத்த உள்ள, முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை, சட்டசபை விதி, 110ன் கீழ், முதல்வர், வெளியிடுவார்.இதற்காக, அனைத்து துறை தலைவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும், தங்கள் துறைக்கு தேவையானவை குறித்த விபரங்களை, அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் வெங்கடாசலம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாடகை கட்டடத்தில் இயங்கும், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, தாலுகா அலுவலகம் மற்றும் குடியிருப்பு, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய விபரங்களை, மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X