பொது செய்தி

தமிழ்நாடு

மதுக் கடைகளில் கூடுதல் வசூல்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : பிப் 08, 2020
Advertisement

- நமது நிருபர் -மது வகைகளின் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், கடைகளில், கூடுதல் கட்டண வசூலை தடுக்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூடுதல் செலவுதமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,200 மது கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, பாட்டிலுக்கு கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், இம்மாதம், 7ம் தேதி முதல், பீர், மது வகைகளின் விலை, தலா, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், மது அருந்துவோருக்கு, கூடுதல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மதுக்கடை வாடிக்கையாளர்கள் கூறியதாவது:ஊழியர்கள், 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு, அரசு நிர்ணயித்த விலையுடன், கூடுதலாக, 10 ரூபாய் கேட்கின்றனர். அதிகம் விரும்பும், 'பிராண்டுகளாக' இருந்தால், 30 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பின், பாருக்கு சென்றால், தண்ணீர், சுண்டலுக்கு மட்டும், 50 ரூபாய் செலவாகிறது. தற்போது, மது விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், டாஸ்மாக் ஊழியர்களின் கூடுதல் வசூலை தடுக்கவில்லை எனில், மது விற்பனை பாதிக்கும்.மது வகைகளின் விலையை உயர்த்தியும், அரசுக்கு, வரி வருவாய் அதிகரிக்காது.

எனவே, கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க, டாஸ்மாக் அதிகாரிகள், உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:மது கடை வாடகை, மின் கட்டணம், காலி அட்டை பெட்டிகளை ஏலத்தில் எடுத்தவர்கள், நிர்வாகத்திற்கு செலுத்தாத தொகை என, அனைத்து செலவுகளையும், ஊழியர்களை ஏற்குமாறு, மாவட்ட மேலாளர்கள் கூறுகின்றனர். ரசீது வழங்க வேண்டும்

கூடுதல் விலை தொடர்பாக ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், நேர்மையாக உள்ள ஊழியர்களையும் மிரட்டி, பணம் வசூலிக்கின்றனர். மது கடைகளில், பணம் செலுத்துவதற்கும், மதுபானங்கள் வாங்கவும், தனித்தனி கவுன்டர்கள் அமைத்து, ரசீது வழங்க வேண்டும். அப்போது தான், முறைகேடுகள் தடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X