பொது செய்தி

தமிழ்நாடு

இரு மாணவியருக்கு, 'கொரோனா?' இல்லை என்கிறார் அரசு செயலர்!

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை: சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இரு மாணவியர், 'கொரோனா வைரஸ்' பாதிப்பு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், 'தமிழகத்தில், இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை' என, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.சீனாவில், வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், ஜப்பான், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில், வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, சீனாவில் இருந்து, விமானம் மற்றும் துறைமுகங்களுக்கு வரும் பயணியருக்கு, காய்ச்சல் இருக்கிறதா என்பதை, 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.அதன்படி, சீனா உட்பட பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு, 21 ஆயிரத்து, 312 பேர் வந்துள்ளனர். அதில், 1,738 பேர், அவர்கள் வீடுகளிலேயே தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட, 42 பேரின், ரத்தம் மற்றும் சளி மாதிரிகள், புனே மற்றும் சென்னை கிங்ஸ் ஆய்வகத்தில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அதில், 34 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என, தெரிய வந்ததால், வீடு திரும்பினர். சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, சீனாவில் படிக்கும், தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவியருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், 'இதுவரை யாரும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை' என, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:ஸ்டான்லி மருத்துவமனையில், இரண்டு சீனர்கள் உட்பட, நான்கு பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், இரண்டு சீனர்களுக்கு, வைரஸ் தொற்று இல்லை என, பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.

தமிழகத்தை சேர்ந்த, இரண்டு மாணவியரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது, உறுதிப்படுத்தாத தகவல். தமிழகத்தில், அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கையால், இதுவரை யாருக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, தமிழக மக்கள், கொரோனா வைரஸ் குறித்த பதற்றமோ, பீதியோ அடைய வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.20 டாக்டர்கள் தயார்!ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, 20 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 1,500 எண்ணிக்கையிலான, 'என் 95 மாஸ்க்' மற்றும், 5,000 கையுறைகள் மற்றும் போதியளவில் மருந்துகள் உள்ளன. மேலும், 20 டாக்டர்கள், 20 நர்ஸ்கள் உள்ளிட்டோர், தயார் நிலையில் உள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இதுவரை அனுமதிக்கப்பட்ட, நான்கு பேரில், இரண்டு சீனர்கள், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த, இரண்டு பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X