அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைவர்கள் விடுதலை ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை: 'காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும். ஜனநாயக காற்றை, அனைத்து தரப்பு மக்களும், சுவாசிக்க, இடமளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கைது செய்திருப்பதை கண்டிக்கிறேன். ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, எள்ளி நகையாடுவதுபோல், மத்திய பா.ஜ., அரசு செயல்படுவது, மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற மிருகத்தனமான சட்டங்கள், எந்த மாநிலத்திலும் பயன்படுத்தப்படலாம்; எந்த அரசியல்வாதி மீதும் போடப்படலாம் என்பது, நாட்டிற்கும், மத்திய - மாநில உறவுகளுக்கும் ஏற்றதுமல்ல. தேர்தல் வெற்றியால், பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டது என்பதற்காக, சட்டங்களை வளைத்து, கூட்டாட்சி தத்துவத்தை, பா.ஜ., கேலிக்கூத்தாக்குகிறது.

தேச பக்திக்கு தாங்கள் மட்டுமே, நிரந்தர குத்தகைதாரர்கள்; மற்றவர்கள் எல்லாம் எதிரிகள் என்பது போன்ற, மாய தோற்றத்தை ஏற்படுத்தி, காஷ்மீர் தலைவர்களை கைது செய்வது, பா.ஜ.,வின் சுயநலமே தவிர, மத்திய அரசின் நேர்மையான நடவடிக்கையாக தெரியவில்லை.எனவே, கைது செய்யப்பட்டுள்ள,

அனைத்து அரசியல் தலைவர்களையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நரேந்திர மோடி, பா.ஜ.,விற்காக மட்டும் பதவிப் பிரமாணம் எடுத்த பிரதமர் அல்ல என்பதை நினைவூட்டுவது, தி.மு.க.,வின் கடமை.காஷ்மீரில் ஜனநாயக காற்றை, அனைத்து தரப்பு மக்களும், எந்தவித தடையுமின்றி சுவாசிக்க இடமளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X