கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் நிறுவனங்களின் எண்ணிக்கை முடிவு செய்ய அறிவுறுத்தல்

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை: நிலத்தடி நீர் அளவுக்கு ஏற்ப, குடிநீர் சுத்திகரிப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கையை முடிவு செய்ய, அரசு கொள்கை முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்த, சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த மனு:திருவள்ளூர் மாவட்டத்தில், 200 இடங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 இடங்களில், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிறுவனங்கள், நிலத்தடி நீர் எடுக்க, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' 'பொதுப்பணித் துறை அல்லது சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி, நிலத்தடி நீரை உறிஞ்சி இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை, முழுமையாக மூட வேண்டும்' என, உத்தரவிட்டது.சான்றிதழ்இதையடுத்து, வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித் துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:சென்னை தவிர்த்து, ௩௧ மாவட்டங்களில், ௫௬௭ குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளன. ௨௬௧ யூனிட்டுகளுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ௧௧௦; திருவள்ளூர் மாவட்டத்தில், ௧௧௧ யூனிட்டுகள் இயங்குகின்றன. அவற்றில், காஞ்சிபுரத்தில், ௨௪; திருவள்ளூரில், ௧௫ யூனிட்டுகள், உரிமம் புதுப்பிக்க வில்லை.அனுமதி பெறாத யூனிட்டுகளை மூடும்படி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக, சிறப்பு பிளீடர் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்றவில்லை என்றால், கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் மீது, பொறுப்பை சுமத்த வேண்டியது வரும்.கலெக்டர்கள் மற்றும் தலைமை பொறியாளர்கள், தனிப்பட்ட முறையில் கணிசமான தொகையை, 'டிபாசிட்' செய்வது மட்டும் அல்லாமல், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது வரும். நிலத்தடி நீர் கிடைக்கும் அளவுக்கு ஏற்ப, சுத்திகரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த, அரசின் கொள்கை முடிவை, தாக்கல் செய்ய வேண்டும்.பற்றாக்குறைஅரசு தரப்பில் கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை என்றால், தண்ணீர் பற்றாக்குறையை கருதி, உரிய முடிவை எடுத்து, அடுத்த விசாரணையின்போது, தாக்கல் செய்ய வேண்டும்.வருவாய் குறு வட்டங்களில் இயங்கும், யூனிட்டு களின் எண்ணிக்கை விபரங்களையும், அதற்கான அனுமதி விபரங்களையும், தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணை, வரும், ௨௬ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X