அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய நியமனத்தில் தேர்வுகள் வெளிப்படை

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை: ''மின் வாரியத்தில், ஊழியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுகள், வெளிப்படையாக நடக்கின்றன,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தமிழக மின் வாரிய பொறியாளர் கழகத்தின் பேரவை கூட்டம், சென்னை, ஷெனாய் நகரில், நேற்று நடந்தது. அதில், மின் துறை அமைச்சர் தங்கமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றனர். பின், அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது:மின் வாரியத்தில், ஊழியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகள், ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக நடக்கின்றன; தமிழகத்தில், மின் தடை ஏற்படாது. 'கேங்மேன்' பதவிக்கான உடல் தகுதி தேர்வில், 90 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அதில், எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. அவை, 'வீடியோ' பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதை, நீதிமன்றத்தில் வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு தொடர்பாக, ஸ்டாலின், தனக்கு தெரிந்த தகவல்களை, சி.பி.சி.ஐ.,டி.,யிடம் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால், 'சம்மன்' அனுப்பி, உண்மை வரவழைக்கப்படும். என் மீது, பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறினால், வழக்கு தொடரப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X