அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரிவினையில் குளிர்காயும் தி.மு.க., : பொன் ராதாகிருஷ்ணன்

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை: ''பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்வது, தி.மு.க.,வின் வழக்கமாக உள்ளது,'' என, பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தி.மு.க., பொய்யை கூறி, ஆட்சியை பிடித்தது. மீண்டும் பொய்யை கூறி, ஆட்சியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இரண்டு கோடி கையெழுத்தை பெற்றதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அப்படியென்றால், தமிழகத்தில், நான்கு நபர்களில், ஒருவர் கட்டாயம் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்; இது எப்படி முடியும்? ஏற்கனவே, 1967ல் கடைப்பிடித்த யுக்திகளை பயன்படுத்தி, மாணவர்களை போராட துாண்டுகின்றனர்.

இதற்காக, ஸ்டாலின், கைது செய்யப்பட தகுதி பெற்றவராக உள்ளார்; பொய்யை கூறி கலவரம் மூட்டுகிறார். குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால், முஸ்லிம் சகோதரர்கள், இங்கு வாழ முடியாத சூழல் உருவாகி விடும் என கூறி, கலவரத்தை துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தி.மு.க., கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்தது. இன்று, அதை விட்டுவிட்டு, ஹிந்து மத கடவுள் வெறுப்பு அரசியலை, கையில் எடுத்துஉள்ளனர்.

ஹிந்துக்களை அவமானப்படுத்தினால், முஸ்லிம்கள், தங்களுக்கு நெருக்கமாக வருவர் என்ற, தவறான எண்ணத்தில் உள்ளனர்.எந்த காலத்திலும், தி.மு.க., இரண்டு மதத்தினரும், ஒற்றுமையாக வாழ விரும்பியதில்லை. பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்வது, தி.மு.க.,வின் வழக்கமாக உள்ளது. இதை, தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., சகோதரர்கள், நெற்றியில் பூசும் திருநீறு, கும்பிடும் தெய்வம் உண்மை என்றால், கட்சி தலைமையிடம், 'ஏன் கொச்சைப் படுத்துகிறீர்கள்' என்று கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால், போராட்டம் முடிந்து விடும். தமிழகத்தில், தி.மு.க., முடிவை நோக்கி செல்கிறது. அதனால் தான், துணைக்கு ஆள் சேர்க்கின்றனர்.

நடிகர் ரஜினி, உண்மையை கூறியுள்ளார்; உண்மையை கூறினால், ஹிந்து பயங்கரவாதி என்கின்றனர். இதற்கு, விடிவு காலம் வரும். முஸ்லிம் தலைவர்களோடு பேச, தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X