பொது செய்தி

தமிழ்நாடு

10,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கின்னஸ் சாதனை

Added : பிப் 08, 2020
Share
Advertisement
 10,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கின்னஸ் சாதனை

சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஒரே சமயத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் ஒன்று கூடி, நடனமாடி, 'கின்னஸ்' சாதனை படைத்தனர்.

சென்னை, மேடவாக்கம் அடுத்த கவுரிவாக்கம், எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரியில், 'சதிர் -- 10,000' என்ற பரத நாட்டிய நிகழ்ச்சியை, தமிழக சுற்றுலாத் துறை நடத்தியது. இதில், பள்ளி, கல்லுாரிகள், நடனப் பள்ளிகளில் உள்ள பரத நாட்டிய மாணவர்கள் பங்கேற்று நடனமாடினர். இந்நிகழ்ச்சி யில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு, 7,190 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியே, கின்னஸ் சாதனை முயற்சியாக இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடி, பழைய சாதனையை முறியடித்துள்ளனர்.நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட கலெக்டர் ஜான்லுாயிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X