அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் பணிகள் துவக்கம்! அதிமுக, திமுக கட்சிகள் சுறுசுறுப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 tamilnadu assembl,y election, palanismay, stalin, சட்டசபை, திமுக, அதிமுக, பட்ஜெட், துவக்கம், தேர்தல், பழனிசாமி, ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஓராண்டு இருந்தாலும், அதற்கான ஆயத்தப் பணிகளை, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இப்போதே துவக்கி உள்ளன. வரும், 14ம் தேதி துவங்கும், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின், தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆலோசனைகளும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தரப்பில் துவக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், 2011ல் இருந்து, அ.தி.மு.க., ஆட்சி கட்டிலில் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஊர் ஊராக நடை பயணம் சென்றார்; அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார். எனினும், ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக மட்டும், உருவெடுக்க முடிந்தது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக உடையும். ஆட்சி நம் கைக்கு வரும் என, தி.மு.க., எதிர்பார்த்தது; அதுவும் நடக்கவில்லை. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 39 லோக்சபா தொகுதிகளில், 38 இடங்களில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது.

இது, தி.மு.க., தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது; ஆனால், நீடிக்கவில்லை. அடுத்து நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தோல்வியை தழுவியது. 27 மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், பெரிய வெற்றியை பெற முடியவில்லை. இதனால் தொய்வடைந்த, தி.மு.க., தலைமை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை பொதுத் தேர்தலில், கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் கை கோர்த்துள்ளது.

அவரது, 'ஐபேக்' நிறுவனம், தி.மு.க.,வின் வெற்றிக்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலின்படி, தேர்தல் பணிகளை, தி.மு.க., துவக்கி உள்ளது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், அ.தி.மு.க.,விலும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்க உள்ளனர். நாளை, 10ம் தேதி முதல், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும், சென்னைக்கு அழைத்து, தேர்தல் பணி குறித்து, முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசிக்க உள்ளனர். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடிக்காக வேலை பார்த்தார். அப்போது, அ.தி.மு.க.,விற்கு அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி, தேர்தல் வியூகங்களை வகுத்தது.

தற்போது, தகவல் தொழில்நுட்ப அணியில், கோஷ்டி பூசல் அதிகமாக இருப்பதால், சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்ய, தனியார் நிறுவனங்களை பணிக்கு அமர்த்துவது குறித்து, ஆளும் கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க., அதிக இடங்களை பெற வேண்டும் என்பதற்காக, தற்போதே தனித்து போட்டி என்ற, கோஷத்தை துவக்கி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ, நடிகர் ரஜினி, கட்சி துவக்கினால், அவரோடு இணைந்து போட்டி யிடுவது அல்லது அ.தி.மு.க., கூட்டணியிலேயே தொடர்வது என்ற முடிவில் உள்ளது.

தி.மு.க., கூட்டணியில், சட்டசபை தேர்தலில், குறைந்த தொகுதிகளை ஒதுக்கி விடக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் மாநிலத் தலைமை, அவ்வப்போது, தி.மு.க.,விற்கு எதிரான கருத்துகளை உதிர்த்து வருகிறது. அதே நேரத்தில், அக்கட்சியும் ரஜினி வரவை எதிர்நோக்கி உள்ளது. ரஜினியுடன் கூட்டு சேர, காங்கிரசில் ஒரு தரப்பினர், இப்போதே முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. வரும், 14ம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


வலைதளங்களில் பிரசாரம்!


தி.மு.க., தலைமை, சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக, போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், 'தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதியாக உள்ளது' என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது, ஹிந்துக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து, ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, ஹிந்துக்களுக்கு எதிராக, தி.மு.க., தரப்பில் வெளியிடப்பட்ட கருத்துகளை தேடிப் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிடும் பணியை, அ.தி.மு.க., செய்து வருகிறது.

ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி, தி.மு.க., என்ற கருத்தை பரப்பினால், தி.மு.க.,விற்கு செல்லும் ஹிந்துக்கள் ஓட்டுகளை தடுக்க முடியும் என்று, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. இதனால், அந்த போக்கை கைவிடுவதா, தொடர்வதா என, தி.மு.க., தலைமை தடுமாறி வருகிறது.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-பிப்-202017:18:13 IST Report Abuse
ஸாயிப்ரியா பிரசாந்த்கிஷோர் இயக்கத்தில் வாரிசு குடும்பம். ஆனால் விருதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
09-பிப்-202011:37:23 IST Report Abuse
Apposthalan samlin இந்த ஆட்சி ஊழல் ஆட்சி .அங்க இங்க கை வைத்து கடைசியில் மாணவர்கள், படித்த வாலிபர்கள் அடிவைத்திலயும் கை வைத்து விட்டார்கள் tnpsc என்றால் நம்பிக்கை என்று போய் ஊழலின் கூடாரம் என்று ஆகி விட்டது . இந்த ஆட்சி தூக்கி எரிய பட வேண்டும் . நல்லாட்சி ஊழல் இல்லாத ஆட்சி மக்களாட்சி மலரவேண்டும் .
Rate this:
vaithiyalingam - Bengaluru,இந்தியா
09-பிப்-202013:11:47 IST Report Abuse
vaithiyalingam அல்லேலூயா ஊயல் யில்லாத ஆச்சி எதுப்பா திருடன் குடும்ப கட்சியோட ஆச்சி தானே?...
Rate this:
vaithiyalingam - Bengaluru,இந்தியா
09-பிப்-202013:15:23 IST Report Abuse
vaithiyalingam மதம் மாத்துறதுக்கு தங்கு தடையில்லாம இருக்கிற ஆட்சி வேணுமா அல்லேலூயா...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-பிப்-202010:39:26 IST Report Abuse
blocked user திமுக இப்பொழுதெல்லாம் கடவுவள் நம்பிக்கை உள்ள காட்சியகைவிட்டது. கனிமொழிக்கு தைப்பூசம் கூட தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X