பொது செய்தி

தமிழ்நாடு

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன்!

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன்!

பெண்கள் ஈடுபட விரும்பாத, நிலக்கரி சாம்பல் விற்பனை தொழிலில் களமிறங்கி, சாதனை படைத்து வரும் சென்னையை சேர்ந்த, 'பிஸ்மில்லா டிரேடர்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் நஜ்முன்னிசா: நடுத்தர குடும்பம் தான் எங்களுடையது. 10வது படிக்கும் போது, அப்பா இறந்து விட்டார். குடும்ப கஷ்டத்தால், பி.காம்., முதல் ஆண்டிலேயே நின்று விட்டேன். வங்கி தேர்வில் வெற்றி பெற்று, ஓராண்டு பணியில் இருந்தேன். திருமணமானதும், வீடு கட்ட துவங்கியிருந்தோம்.

ஹாலோ பிளாக் எனப்படும் சிமென்ட் கற்களைப் பயன்படுத்தினோம். அந்த கற்களை தயாரிக்க தேவையானது, 'பிளை ஆஷ்' எனப்படும், நிலக்கரி சாம்பல் தான். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்ததால், செங்கலுக்கு மாற்றாக, ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்த துவங்கினாங்க. எதிர்காலத்தில், இந்த கற்களுக்கு கடும் கிராக்கி இருக்கும் எனக் கருதி, அந்த கற்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு சென்று, தொழில் வாய்ப்புகளை தெரிந்து கொண்டேன்.நிலக்கரி சாம்பல் அதிக அளவில் கிடைக்கும் அனல் மின் நிறுவனங்களுக்கு சென்று, நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஏற்கனவே, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் தெரியும் என்பதால், தொழிலுக்கு வசதியாக போய் விட்டது. சேமிப்பு பணம் முழுவதையும் இந்த தொழிலில் போட்டு, முழு அளவில் நிலக்கரி சாம்பல் கொள்முதல், விற்பனை தொழிலில் இறங்கினேன். அதற்காக, நிறைய லாரிகளை அமர்த்த வேண்டி வந்தது. அவற்றை வாடகைக்கு பிடிப்பதை விட, சொந்தமாக வாங்கிக் கொள்ளலாமே என நினைத்து, கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளை வாங்கினேன்.அவற்றை, ஒரு நாள் கூட இடை விடாமல் இயக்கும் தந்திரத்தை அறிந்து, நிலக்கரி சாம்பல் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில், தரமான விதத்தில், குறைந்த செலவில் சப்ளை செய்ததால், என் நிறுவனத்தின் பெயர், தொழில் நிறுவனங்களின் மத்தியில் புகழ் பெறத் துவங்கியது.

அப்படியே படிப்படியாக, நிறைய லாரிகளை வாங்கினேன். அவற்றிற்கு தேவையான டயர்களை வெளியிடங்களில் வாங்க வேண்டி வந்தது. அதற்கு பதில், லாரி டயர் விற்பனை டீலர் தொழிலை துவக்கினேன். எங்கள் சொந்த லாரிகளுக்கு பொருத்தியது போக, பிறருக்கும் விற்பனை செய்கிறோம். இப்படியே இப்போது, 50 லாரிகளுக்கு மேல் உள்ளது; 200 லாரிகளாக உயர்த்த திட்டமிட்டு உழைக்கிறேன். புதிதாக இரண்டு தொழில்களில் ஈடுபடவும் திட்டமுள்ளது. எனினும், என் குழந்தையை இப்போதும், நான் தான் பள்ளி யில் கொண்டு விடுகிறேன். ௧ வயதாகும் மற்றொரு ஆண் குழந்தையையும், நான் தான் கவனிக்கிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
11-பிப்-202014:05:41 IST Report Abuse
TechT இவர் போன்ற பெண்கள் தான் பெண்ணியத்தின் முன்னோடிகள் ....இதுதான் உண்மையான feminism......சும்மா அரை குறை ஆடை அணிந்து ஆண்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்வோம் என்பவர்கள் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
11-பிப்-202011:13:46 IST Report Abuse
Ramesh M வாழ்த்துக்கள். ஷார்ட்டாக தொழில் நடத்துவதற்கு உரிய ஊக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X