ராமர் கோயில் டிரஸ்ட்: ரகசியம் காத்த மோடி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement

புதுடில்லி: கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.



latest tamil news




ஆளும் கட்சி எம்.பி.,க் களும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவே இல்லை. இந்த திடீர், அதிரடி அறிவிப்பிற்கு, எதிர்ப்பு தெரிவிக்க கூட எதிர்க்கட்சியினருக்கு நேரம் கிடைக்கவில்லை. மோடி என்ன சொன்னார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்குள், அவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ராமர் கோவில் கட்ட டிரஸ்ட் துவக்கப்பட்டதையும், அதில், 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதையும் தான் மோடி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு படு ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கூட பிரதமர் என்ன பேசப்போகிறார் என்பது தெரியாது. ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும; அதற்கு சபாநாயகர் அனுமதி வேண்டும் என மட்டுமே அவரிடம் சொல்லப்பட்டது. இந்த செய்தியை அறிவிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான், விஷயம் மத்திய அமைச்சர்களுக்கே தெரிய வந்தது. காரணம், மத்திய அமைச்சரவை தான் இந்த டிரஸ்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டம், பார்லிமெண்ட் வளாகத்திலேயே நடைபெற்றது. அப்போதுதான், மோடி இதைப் பற்றி சொன்னார். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும்,நேராக லோக்சபாவிற்கு சென்று அறிவித்துவிட்டார் மோடி.


latest tamil news




டிரஸ்ட் சம்பந்தப்பட்ட விஷயம், முன்பே தெரிந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பிரச்னை எழுப்புவார்கள் என்பதால், மோடி ரகசியம் காத்தார்.இந்த டிரஸ்டின் முதல் உறுப்பினர், தமிழகத்து பெரியவர் கேசவன் பராசரன், 92. இந்தியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரல். உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கில், ராமருக்காக வாதாடி வெற்றி பெற்றவர்.

ராமர் கோவில் டிரஸ்டில் உறுப்பினராக, பராசரன் முதலில் தயங்கினாராம். ஆனால், பிரதமர் மோடி, பராசரன் மகன் மோகனிடம், 'அப்பாவை, எப்படியாவது சம்மதிக்க வைத்து விடுங்கள்' என, கேட்டுக் கொண்டாராம். பிரதமர் மற்றும் மகனின் அன்பினால், சீனியர் பராசரன் ஒத்துக் கொண்டார். டில்லியில் உள்ள பராசரன் வீடுதான், இந்த டிரஸ்டின் அலுவலகமாக செயல்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
13-பிப்-202021:11:06 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ராமர் கோயில் டிரஸ்ட்: ரகசியம் காத்த மோடி :: என்ன ரகசியம் கத்தரி முளைச்சல் கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும் அப்புறம் என்ன சிதம்பர ரகசியம்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-பிப்-202020:28:20 IST Report Abuse
Sampath Kumar ராமனே கொன்ற ராவணனுக்கு என்ன கோயில் கட்டுவீங்க சார் என்ன அதிர்ச்சியா இருக்கா?? உண்மை இது தான் இங்கு பொங்க விருப்பும் அன்பர்கள் பொங்கலாம் பதில் அளிக்க நான் கடமை பட்டு உள்ளேன்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-பிப்-202016:02:41 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர் மோடிஜி புகழ் ஓங்கட்டும் உயரட்டும். வாழ்க பாரதம். இந்தியன் குமார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X