பொது செய்தி

தமிழ்நாடு

சொக்கம்மன்  கோவிலில்  பவுர்ணமி  விழா 

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 சொக்கம்மன்  கோவிலில்  பவுர்ணமி  விழா 

திருப்போரூர்:திருக்கழுக்குன்றம், திருமலை சொக்கம்மன் கோவிலில் தை பவுர்ணமி விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
திருக்கழுக்குன்றம், கிரிவலப் பாதையில், வேதகிரீஸ்வரர் கோவிலின் துணைக் கோவில்களில் ஒன்றாக, திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், நேற்று, தை மாத பவுர்ணமியையொட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால், மகா அபிஷேகம், தீப, துாப ஆராதனைகள் நடந்தன.அதைத் தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில், சொக்கம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X