சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி தங்கக்கட்டி விற்க முயன்ற மூவர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 போலி தங்கக்கட்டி விற்க முயன்ற மூவர் கைது

காஞ்சிபுரம்;காஞ்சிபுரத்தில், போலி தங்கக்கட்டியை விற்க முயன்ற, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம், 43. பெரிய காஞ்சிபுரத்தில், டீக்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த, இரு பெண்கள் உட்பட மூன்று பேர், நேற்று காலை, அந்தக் கடைக்கு சென்றுள்ளனர். கடையில் இருந்த செல்வம் மற்றும் அவரது மனைவி ஆனந்தியிடம், போலி தங்கக்கட்டியைக் காட்டி, 'எங்களுக்கு அவசரத் தேவை இருப்பதால், இதை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தைக் கொடுங்கள்', என்றனர்.அப்போது, ஆனந்தியின் தம்பி, கடைக்கு வந்தார். அவர், அவர்களை அடையாளம் கண்டு பிடித்து விட்டார்.ஏற்கனவே இவர்கள் தான், ஓராண்டுக்கு முன் வந்து ஏமாற்றி, பணத்தை வாங்கிச் சென்றவர்கள் என, கூறியதும், அவர்கள் தப்பிக்க முயன்றனர்.போலீசார் அங்கு சென்று, அந்த மூவரையும் கைது செய்தனர். ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ, 45, அவரது மனைவி லட்சுமி, 43. தங்கை கங்கா, 40, என, தெரிய வந்தது.இது குறித்து, செல்வம் கூறியதாவது:ஓராண்டுக்கு முன், இதே தெருவில், தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வந்தேன். இவர்கள், என்னிடம் வந்து, ஒரு சின்ன தங்கத்துண்டைக் காண்பித்து, இதே மாதிரி, பெரிய அளவில் தங்கக்கட்டி எங்களுக்கு புதையலாக கிடைத்தது. அதை வாங்கிக் கொண்டு, பணத்தைக் கொடுங்கள், என்றனர்.
அந்த சின்ன தங்கத்துண்டை வாங்கி சோதனை செய்து பார்த்ததில், அது தங்கம் என, தெரிந்தது. அதை நம்பி, அவர்கள் கொடுத்த வேறு தங்கக்கட்டியை வாங்கி, அதற்கு, ௨ லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். மறுநாள், அதை சோதனை செய்து பார்த்த போது, அது போலி என, தெரிய வந்தது.அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தற்போது வேறு கடை என்பதால், அவர்கள் அடையாளம் தெரியாமல், எங்கள் கடைக்கு வந்து, முன் கூறியது போல் சொன்னதும், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, பிடித்து வைத்து, போலீசில் தெரிவித்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.போலீசார் அவர்களிடம், வேறு எங்காவது இதே போல் ஏமாற்றி உள்ளனரா என, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X