சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாக்டர் வீட்டில் பணம் மாயம்

Added : பிப் 09, 2020
Advertisement

செங்கல்பட்டு: பொன்விளைந்தகளத்துார் அடுத்த, எலுமிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகள் பானுப்பரியா, 24. இவருக்கு, திருமணம் நடைபெற உள்ளது. இவர், செங்கல்பட்டு, வேதாசலம் நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில், வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், நகைகள் வாங்குவதற்காக, வீட்டிலிருந்து, 1.95 லட்சம் ரூபாய் எடுத்து வந்தார்.டாக்டர் வீட்டு வரவேற்பு அறையில், பணப்பையை வைத்துவிட்டு பணிகளை கவனித்தார். அதன்பின், பணி முடிந்து, பணப்பையை எடுக்கச் சென்றபோது, காணாமல் போனதைக் கண்டார். இது குறித்து, செங்கல்பட்டு நகர போலீசில் புகார் செய்தார்.
டூ - வீலர் அபேஸ்
திம்மாவரம்: செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சுந்தரம், 26. இவர், பல்சர் மோட்டார் சைக்கிளில், திம்மாவரம் பழத்தோட்டத்தில் உள்ள, உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம், சென்றார்.அங்கு, வாகனத்தை நிறுத்திவிட்டு, உறவினர் இடம் பேசிக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டர் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டார். இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண் சடலம் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, ஆட்டுப்புத்துார் பகுதியில் உள்ள, தைல மரம் காட்டு வழியாக, அப்பகுதி மக்கள் நேற்று சென்றுள்ளனர்.அப்போது அங்கு, ஆண் சடலம் கிடப்பதைப் பார்த்து, தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்தச் சடலத்தைக் கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவருக்கு, 55 வயதிருக்கும். உடலில் எந்தக் காயமும் கிடையாது என, போலீசார் தெரிவித்தனர். கொலையா, தற்கொலையா என, விசாரிக்கின்றனர்.
29 சவரன் நகை கொள்ளை
கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, பெரிய தெருவைச் சேர்ந்தவர் மணி. இவர் தன் குடும்பத்தினருடன், கடந்த, 6ம் தேதி வெளியூர் சென்றார்.மறுநாள் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 29 சவரன் தங்க நகை, வெள்ளி உள்ளிட்ட, ௭ லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிந்தது.இது குறித்து, கடம்பத்துார் போலீசில், மணி அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருள் பறிமுதல்
செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம், தொழுவூர் குப்பம், கந்தன்கொல்லை, திருவூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்கள் பாபு, 60; வினோத், 36; சுடலைமணி, 72, ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடைகளில் தொடர் திருட்டு
மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த, குமரன் நகரைச் சேர்ந்தவர் ரஷீத், 56. இவர், அதே பகுதியில், செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது கடையில் மர்ம நபர்கள் நுழைந்து, 17 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம் மற்றும் புது செருப்பினை திருடிச் சென்றுள்ளனர்.மேலும், அருகில் இருந்த மளிகை கடை மற்றும் பஞ்சர் கடைகளின் பூட்டை உடைத்து, திருட முயற்சித்துள்ளனர். இது குறித்து, மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X