நாட்டை உயர்த்துங்கள்

Added : பிப் 09, 2020
Advertisement
நாட்டை உயர்த்துங்கள்

நம் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள், மிகப்பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. இங்கு பயின்று வெளியேறும் மாணவர்கள், புதிய நிறுவனங்களை துவங்கி, தொழில்துறையில் வளர்வதுடன், நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும். 'நாளையே இறந்துவிடுவோம் என்பதை போல, வாழ்க்கையை வாழு; என்றென்றும் வாழ்வோம் என்பதை போல, கல்வியை பயிலு' என காந்தி கூறியதை போல, மாணவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கிரண் ரிஜிஜூ, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர், பா.ஜ.,

புகழ் பெறுவது நோக்கமல்ல

தீர்ப்பு வழங்குவது என்பது கடினமான பணி. பொதுவாக, எந்த விவகாரத்திலும், இறுதி முடிவு எடுப்பதை, பெரும்பாலானவர்கள் தவிர்த்துவிடுவர். அதுவே, நீதிபதிகளின் பணியாக இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட விவகாரத்திற்கு தீர்வு காண்பது மட்டுமே, நீதிபதியின் இலக்காக இருக்கும். மாறாக, புகழ் பெற வேண்டும் என்பது நோக்கமாக இருக்காது.
எஸ்.ஏ.பாப்டே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

காத்திருக்கும் சவால்கள்

படித்து முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்கள், பலவிதமான சவால்கள் சந்திக்க நேரிடும். அந்த சவால்களை, தைரியத்துடன் எதிர்கொண்டால் மட்டுமே, அவை வாய்ப்புகளாக மாறும். கடினமாக உழைப்பவர்களின் வெற்றியை, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம்.

ரமேஷ் பொக்ரியால், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X