முதல்வர் கோப்பை போட்டி

Added : பிப் 09, 2020
Advertisement

காஞ்சிபுரம்:மாவட்ட அளவில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, வரும், 14 முதல், 16ம் தேதி வரை நடக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அளவில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, வரும், 14ம் தேதி துவங்கி, மூன்று நாள் நடைபெறுகிறது.இதில், கூடைப்பந்து, கையுந்து பந்து, ஏனாத்துார் சங்கரா பல்கலையில் நடக்கிறது. தடகளம், காரப்பேட்டை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.வளைகோல் பந்து, ஜூடோ, குத்துச்சண்டை, இறகுப்பந்து, கபாடி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கின்றன.நீச்சல் மற்றும் கோல் ஊன்றி தாண்டுதல், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 25 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும்.பள்ளி, கல்லுாரியில் பயிலும் மாணவர்கள், படிப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.
வேலையில் இருப்போர், அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.மாவட்ட அளவில், விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பெறுவோர், மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க முடியும்.முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு, முறையே, 1,000, 750, 500 ரூபாய், அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.வீரர், வீராங்கனைகள், தங்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், இரு பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X