பெண் எஸ்.ஐ., சுட்டுக்கொலை: காதலித்த எஸ்.ஐ., தற்கொலை

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 பெண் எஸ்.ஐ., சுட்டுக்கொலை: காதலித்த எஸ்.ஐ., தற்கொலை

புதுடில்லி: டில்லியில், காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் எஸ்.ஐ.,யை, வேலை முடிந்து வீட்டுக்கு போகும் வழியில், மற்றொரு எஸ்.ஐ., சுட்டுக்கொலை செய்தார். பின், அவரும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மர்ம நபர்டி

ல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின், எஸ்.ஐ.,யாக இருந்தவர், பிரீத்தி அஹ்லாவத், 26.பிரீத்தி, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மெட்ரோ ரயிலில் புறப்பட்டார்.ரோஹிணி பகுதியில், அவர் தங்கிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பிரீத்தி கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த போலீசார், விசாரணையை துரிதப்படுத்தினர். கொலை நடந்த பகுதியில் இருந்த, சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், பிரீத்தியுடன், 2018ல், போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற, ஹரியானாவின் சோனிபட்டை சேர்ந்த திபன்ஷு ரதி, அவரை சுட்டுக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திபன்ஷு ரதியை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விசாரணைஇந்த சம்பவம் குறித்து, டில்லி சீனியர் போலீஸ் அதிகாரி எஸ்.டி.மிஸ்ரா கூறியதாவது:போலீஸ் அகாடமியில் பயிற்சியில் இருந்த பிரீத்தியை, திருமணம் செய்ய திபன்ஷு விரும்பியுள்ளார். அவர் தன் ஆசையை தெரிவித்தும், பிரீத்தி அதை ஏற்கவில்லை.

இதனால் வேதனை அடைந்த திபன்ஷு, பிரீத்தியை சுட்டுகொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். திபன்ஷுவின் மொபைல் போன் சிக்னல் மூலம் அவரை தேடிய போது, முர்தால் பகுதியில், கதவுகள் மூடப்பட்ட காருக்குள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிஉள்ளோம். வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X