பொது செய்தி

தமிழ்நாடு

களக்காட்டூர் பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் பகுதியில், அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. அப்பகுதி மக்கள் மின் வாரியத்தில் மனு கொடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட குருவிமலை, கே.எஸ்.பி. நகர் நெசவாளர் குடியிருப்பு, வசந்தம் நகர் ஆகிய பகுதிகளில், தினசரி, பல முறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.மேலும், குறைந்த, அதிக அழுத்தம் மின்சாரத்தால், வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதாகி விடுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கினர்.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் கூறியதாவது:எங்கள் பகுதிக்கு, மாகரல் துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வருகிறது. இதற்கு முன், ஒரு சில நாட்களில், இது போன்ற மின் துண்டிப்பு ஏற்படும்.சமீப காலமாக இந்தப் பகுதிகளில், கருங்கல் உடைக்கும் கிரஷர் தொழில் அதிகரித்து விட்டது. இதனால், மின் சப்ளை எங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.பொங்கலில் இருந்து, இந்த பிரச்னை அதிகரித்து விட்டது. ஒரு நாளைக்கு, பத்து முறைக்கு மேல் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.மேலும், சீரான மின்சாரம் இல்லாததால், அதிக அழுத்த மின்சாரத்தில், மின் சாதனங்கள் பழுதடைகின்றன. இது குறித்து, மாகரல் மின் வாரியத்தில் மனு கொடுத்து உள்ளோம்.இவ்வாறு,அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X