3 மாடி வணிக வளாகம் இடிந்து தரைமட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

சண்டிகர்: மொஹாலியில் மூன்று மாடி வணிக வளாக கட்டடம், இடிந்து தரைமட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மொஹாலியில் மூன்று மாடி வணிக வளாகம் ஒன்றின் அருகே, புதிய கட்டடம் கட்டுவதற்கு, 'பொக்லைன்' இயந்திரத்தால் குழி தோண்டும் பணி, நேற்று நடைபெற்றது. அப்போது, வணிக வளாகம், பொலபொலவென இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், பொக்லைன் இயந்திர பணியாளர் உள்ளிட்ட இருவர், கட்டட இடிபாடு களுக்குள் சிக்கினர். அவர்கள் இருவரும், 'மொபைல்' போன் மூலம் வெளியே இருந்தவர்களிடம் பேசினர். இவர்கள் மட்டுமின்றி, வணிக வளாகத்தில் இருந்த பலரும், இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு விபத்தில், 2 பேர் பலி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டான் டரன் மாவட்டத்தில் நடந்த, சீக்கிய மத பேரணியின்போது, பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, வெடிக்கப்பட்ட பட்டாசு, அருகில் உள்ள ஒரு டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதில் டிராக்டரில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X