செய்தி சில வரிகளில்...

Added : பிப் 09, 2020
Share
Advertisement

பி.எஸ்.ஏ., பாய்ந்தது

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்பட, ஐந்து பேர், பி.எஸ்.ஏ., எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நயீம் அக்தர், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிபத்தில், 7 வீரர்கள் காயம்

தானே: மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், 21 தளங்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட, 7 தீயணைப்பு வீரர்கள் காயம்அடைந்தனர்.300 பேர் மீது வழக்குமும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் நாக்படாவில், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமீபத்தில் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக, போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற, 300 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.,க்கு சம்பளம் நிறுத்திவைப்பு
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர் கொலை வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து ஆஜராகாத, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டரின் சம்பளத்தை நிறுத்தி வைக்க, மீரட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.ஒருவருக்கு துாக்கு தண்டனைகுருகிராம்: ஹரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாவலருக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸ் தற்கொலை

அசம்கர்க்: உத்தர பிரதேச மாநிலம் அசம்கர்க் அருகே, பெண் போலீஸ், பூஜா சிங், 24, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தனியாக வசித்து வந்த அவர், பணிக்கு வராததால், சக போலீசார் வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான், அவர் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.ஆஜராகாத எஸ்.ஐ.,க்கு சம்பளம் நிறுத்திவைப்புமுசாபர்நகர் : உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர் கொலை வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து ஆஜராகாத, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டரின் சம்பளத்தை நிறுத்தி வைக்க, மீரட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.--------------

கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு

குருகிராம் : ஹரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாவலருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X