சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உ.பி.,யை சேர்ந்த 2 பேர் கைது

Added : பிப் 09, 2020
Advertisement

சூணாம்பேடு;செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், கொளத்துார் செக்போஸ்ட்டில் நேற்று சூணாம்பேடு போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மோகித் குமார், சைலேந்திர சிங் ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 35 டெபிட் கார்ட், 12 கிரெடிட் கார்டு, 3 ஏ.டி.எம்., கார்டு உட்படரொக்கம் 41 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட சூணாம்பேடு போலீசார், போலி கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் கும்பலை சேர்ந்தவர்களா என, விசாரணை மேற்கொண்டனர்.இதில், முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்தனர். இதனால், இருவரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.இதில், இவர்கள் சென்னையில், பெரியமேடு பகுதியில் வாடகை வீட்டில், இவர்களுடன் ஒருவர் சேர்ந்து மூன்று பேராக தங்கி இருப்பதாகவும் பல்வேறு கார்டுகள் வைத்து இருந்தனர்.இதனால், ஏ.டி.எம்., மையத்தில் போலி கார்டுகள் மூலம் பணம் எடுக்கப்பட்டதா, இவருடன் தங்கியுள்ள நபர் யார், இவர் ரூமில் ஏதாவது இருக்கிறதா என, பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X