கொரோனா பாதிப்பு ; கப்பலில் 160 இந்தியர்கள் தவிப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2+ 32)
Advertisement
Corona,Virus, Japan_ship, Medical_Checkup, Indians, இந்தியர்கள் ,தவிப்பு, கொரோனா, பாதிப்பு, மத்திய அரசு, கோரிக்கை

புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பாதிப்பு அச்சத்தில், ஆசிய நாடான ஜப்பானுக்கு அருகே, கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில், பரிதவிப்பதாகவும், உடனடியாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், 160 இந்திய ஊழியர்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.


பரிசோதனை


இங்கே, கேரளாவைச் சேர்ந்த, மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா சென்று திரும்பியவர்கள் மூலமே, இந்த வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில், ஆசிய நாடான ஜப்பானின் கடல் அருகே, ஒரு சொகுசு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர், ஹாங்காங்கில் இறங்கி உள்ளார். அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த சொகுசு கப்பல், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.'டயமண்ட் பிரின்சஸ்' என்ற இந்த சொகுசு கப்பலில், 2,666 பயணியரும், 1,045 ஊழியர்களும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 62 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, நேற்று, 65ஆக உயர்ந்தது.


பாதிப்பு

இந்தக் கப்பலில், 160 இந்தியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கப்பலில் பணியாற்றும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பினய் குமார் சர்க்கார் என்பவர், சமூக வலைதளத்தில், ஒரு 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: நாங்கள், மிகவும் மோசமான, அபாய கட்டத்தில் உள்ளோம். இந்தக் கப்பலில் உள்ள பலருக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்படுகிறது. இந்நிலையில், இக்கப்பலில், 160 இந்தியர்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுடைய நிலை குறித்து, குடும்பத்தார் அச்சத்தில் உள்ளனர்.எங்களை உடனடியாக மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமைபடுத்தி, பரிசோதனைகள் செய்து, தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


15 மாணவர் வருகை


இதற்கிடையே, சீனாவின் ஹூபய் மாகாணத்தில் இருந்து, 15 மாணவர்கள், கேரளாவின் கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். ஹூபய் மாகாணத்தின் குன்மிங் விமான நிலையத்தில் இருந்து, பாங்காங் சென்ற அவர்கள், விமானம் மூலம் கொச்சிக்கு நேற்று வந்தனர். அவர்கள், கலமசேரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சந்திக்க, விமான நிலையம் வந்த உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


பலி, 723 ஆக உயர்வு


சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 723 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும், 82 பேர் உயிரிழந்தனர். புதிதாக, 3,399 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து, 34,546 பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. வூஹான் நகரில் உள்ள மருத்துவனையில், வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த, 60 வயது அமெரிக்கர் உயிரிழந்தார். அதேபோல், ஜப்பானை சேர்ந்த ஒருவரும், உயிரிழந்துள்ளார்.

''கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க, சீனா சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங்குடன் இது தொடர்பாக பேசினேன்,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.இதற்கிடையே, சீனாவுக்கு, 714 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

''இந்த தொகையுடன், அமெரிக்க மக்கள் நன்கொடையாக அளித்த பணம் மற்றும் பொருட்களும் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோ கூறியுள்ளார்.

• சீனாவின், வூஹான் நகரில் இருந்து, 150 கி.மீ., தூரத்தில் உள்ள ஜிங்ஷான் நகரில், தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி, 25 வயது பெண், பலாத்காரத்தில் இருந்து தப்பியுள்ளார். வீட்டில் அந்த பெண் தனியாக இருந்த போது, கொள்ளையடிப்பதற்காக நுழைந்த மர்மநபர், பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது, வைரஸ் நோயால், தன்னை தனிமையில் வைத்துள்ளதாக, அந்த பெண் கூறி தப்பியுள்ளார்.

பெண்ணின் புகார் அடிப்படையில், கொள்ளையன் கைது செய்யப்பட்டார். ஹூபய் மாகாணத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 91 வயது முதியவர், நோய் குணமாகி வீடு திரும்பினார். அவரது பெயர் வௌியிடப்படவில்லை. யூஷ்வங் பகுதியில் உள்ள மருத்துவமனையில், வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்ததாக, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2+ 32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
09-பிப்-202009:16:00 IST Report Abuse
blocked user இந்திய அரசு கப்பல் ஊழியர்களை மீட்க உதவும் என்று நம்புவோமாக.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
09-பிப்-202009:15:24 IST Report Abuse
blocked user இந்த நிலையிலும் கூட பலாத்காரம் செய்ய, கொள்ளை அடிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக வாழத்தகுதியில்லாதவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X