சட்டவிரோத இணைப்பகம் கேரளாவில் ஒருவர் கைது

Added : பிப் 09, 2020
Advertisement

புதுடில்லி: மஹாராஷ்டிரா போலீசார், ஜம்மு - காஷ்மீர் ராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து நடத்திய நடவடிக்கைகளில், கேரளா உட்பட சில இடங்களில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.புலனாய்வு பிரிவுகடந்தாண்டு, செப்.,ல், ராணுவத்தைச் சேர்ந்த சிலருக்கு, சந்தேகத்துக்குரிய எண்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பேசியவர்கள், ராணுவம் தொடர்பாக தகவல்களை கேட்டுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த, ஜம்மு - காஷ்மீர் ராணுவ புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை போலீசாரும் இதில் இணைந்து கொண்டனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் கேரளாவின் சங்கரமுகுளம் பகுதியில் இருந்து இந்த அழைப்புகள் வந்தது தெரியவந்தது. அதையடுத்து நடத்தப்பட்ட மேல் விசாரணையில், பல்வேறு நிறுவனங்களின், 'சிம்' கார்டுகள் மூலம், வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பை, உள்நாட்டு அழைப்பாக மாற்றியது தெரியவந்தது. அதிலும், குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து மட்டுமே இதுபோன்ற அழைப்புகள் வந்துள்ளன.இவ்வாறு ஒரே நேரத்தில், 200க்கும் மேற்பட்ட சிம்களை பயன்படுத்தப்படக் கூடிய கருவியின் மூலம், ஒரு தொலைபேசி இணைப்பகமாக மாற்றியுள்ளது தெரியவந்தது.

அதையடுத்து, இந்த இணைப்பகங்களில் நடத்திய அதிரடி சோதனையில், பல்வேறு கருவிகள், 200க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.விசாரணைஇது தொடர்பாக, சங்கரமுகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு உள்ளதா, நமது ராணுவம் குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X