பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களின் கையில் குடும்ப பொருளாதாரம்:தெலுங்கானா கவர்னர் தமிழிசை விருப்பம்

Added : பிப் 09, 2020
Advertisement
 பெண்களின் கையில் குடும்ப பொருளாதாரம்:தெலுங்கானா கவர்னர் தமிழிசை விருப்பம்

சென்னை:''குடும்ப பொருளாதாரம், பெண்களின் கையில் இருக்க வேண்டும்,'' என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசினார்.
உழைக்கும் மகளிர் சங்கம், இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் சார்பில், தென்னிந்தியாவில் சிறந்த, மகளிர் கூட்டு றவு அமைப்புகளுக்கு, விருது வழங்கும் விழா; மறைந்த சமூக சேவகர், ஜெயா அருணாசலம் பிறந்தநாள் விழா ஆகியவை, சென்னையில் நேற்று நடந்தன.உழைக்கும் மகளிர் சங்க தலைவர் நந்தினி ஆசாத் தலைமை வகித்தார்.
விழாவில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, சிறந்த மகளிர் கூட்டுறவு அமைப்புகளுக்கு, விருதுகள் வழங்கி பேசியதாவது:இந்தியாவில், வீடு, சமூகம் மற்றும் பிரதான நீரோட்டத்தில், பெண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில், முறைசாரா துறையில், ஏழை பெண் தொழிலாளர்களின், மனித திறனை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டது தான், உழைக்கும் மகளிர் மன்றம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம். இவை, ஏழை பெண்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்துகின்றன.ஆசிய பசிபிக் கூட்டுறவு நிறுவனங்களில், 10 சதவீதம் பெண்கள், அதிக அளவில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளனர். உழைக்கும் ஏழை பெண்கள், பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத போதும், நாட்டிற்கு அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனர். உழைக்கும் பெண்கள், மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களின் கையில், குடும்பத்தின் பொருளாதாரம் இருக்க வேண்டும்; அப்போது தான் குடும்பம் வளர்ச்சி பெறும்.ஆண்களிடம், 100 ரூபாய் இருந்தால், 'டாஸ்மாக்' சென்று விடுவர். பெண்களிடம், 100 ரூபாய் இருந்தால், குடும்பத்திற்காக செலவழிப்பர். அவர்கள், இறைவனிடம் வேண்டுவதாக இருந்தாலும், தன் கணவர் மற்றும் குடும்பத்திற்காகவே வேண்டுவர். அவர்கள் கையில் பொருளாதாரம் இருக்கும் போது, நாடும் வளர்ச்சி பெறும். உழைக்கும் பெண்கள் அனைவரும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; தைரியமாக இருக்க வேண்டும். உடல் நலத்தையும் பேண வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:ஏழை பெண்களுக்காக, 41 ஆண்டுகள், தன்னுடைய சிந்தனை, உழைப்பு ஆகியவற்றை தியாகம் செய்தவர், ஜெயா அருணாசலம். தன் தனி முயற்சியால், ஆறு லட்சம் பெண்களுக்கு, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில், 14 இடங்களில், மையங்களை ஏற்படுத்தி உள்ளார்.அவரது பெரிய வெற்றி, ஏழை பெண்கள், ஏமாறாமல் இருக்க வழிகாட்டியாக உள்ளார். அறியாமை, அடிமைத்தனத்தை போக்கி உள்ளார். அவர் வகுத்த பாதை, அதிக செலவு இல்லாதது; குழப்பம் இல்லாதது. ஆனால், மனசாட்சிப்படி அடிமட்டத்திலிருந்து, வேலை செய்ய துாண்டுவதாகும்.அவர் விட்டு சென்ற பணியை, அவரது மகள் நந்தினி ஆசாத் தொடர்கிறார். அவர், உழைக்கும் மகளிர் சங்கம், இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பாலின வன்முறைகளை எதிர்த்து போராட, இளைஞர் மன்றங்களை உருவாக்குவதற்கான திட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை, கடின உழைப்பாளி. தன் உழைப்பால், இளம் வயதில் கவர்னராகி உள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், பாரதிய வித்யா பவன் தலைவர் என்.ரவி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X