'பைக்' ஓட்டிய சிறுவன் ரூ.42,500 அபராதம்

Added : பிப் 09, 2020
Advertisement

புவனேஷ்வர்: ஒடிசாவில், சிறுவனை 'பைக்' ஓட்டிச்செல்ல அனுமதித்த உரிமையாளருக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகம், 42 ஆயிரத்து, 500ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், இரு நண்பர்களை பைக்கில் ஏற்றி ஓட்டிச்சென்றான்.பத்ரக்கில், ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, சிறுவனின் பைக்கை தடுத்த அதிகாரிகள், 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்படி, பைக் உரிமையாளருக்கு, 42 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சாதாரண குற்றச்செயலுக்கு, 500 ரூபாய்; உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு, 15 ஆயிரம் ரூபாய்; போக்குவரத்து விதிகளை மீறியதற்கு, 5,000 ரூபாய்; இருவருக்கு மேல் பைக்கில் சென்றதற்கு, ௧,௦௦௦ ரூபாய்; ஹெல்மெட் இல்லாததற்கு, 1,000 ரூபாய்; சிறுவன் பைக் ஓட்டிய தவறுக்கு, 25,000 ஆயிரம் ரூபாய் என, பைக் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், சிறுவர்கள் பைக் ஓட்டினால், 25ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், வாகனம் ஓட்டிய சிறுவர்கள், 25 வயது வரையிலும் உரிமம் பெற முடியாது என, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X